சீனாவின் பாகாசுர தொலை பேசி நிறுவனமான குவாவிஸ் டென்மார்க்கின் பாரிய தொலைபேசி நிறுவனமான ரிடிசியை நவீனப்படுத்தும் பொறுப்பை 2013ம் ஆண்டில் ஏற்றது, இந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டு காலத்திற்குரியது.
இப்போது பிரிட்டனின் 4 ஜி அலைவரிசையில் இயங்கும் டென்மார்க் தெலைபேசி சேவை வலையாக்கம் 5 ஜிக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளை சீனாவின் பகாசுர நிறுவனமான குவாவிஸ் மேற்கொள்கிறது. இவர்கள் பிரிட்டனின் கருவிகளை அப்புறப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்தால் டென்மார்க்கிற்குள் சீனாவின் உளவுப்பிரிவு இலகுவாக உள் நுழைந்துவிடுமென பிரித்தானிய உளவுப்பிரிவான எம்.ஐ.6 எச்சரித்துள்ளது.
ஐந்து ஜி வலையாக்கம் வேகமாக இயங்கவல்லது ஆனால் சீனாவின் கையில் டென்மார்க் தனது ஈரல் குலையை கொடுத்தது போலாகிவிடும் விவகாரம் என்று நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.
ஸ்ராட் – ஸ்ரொப் ஆகிய இரு பணிகளையும் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு கைகட்டி நிற்கவேண்டிய நிலை டென்மார்க்கின் இணையவழி செயற்பாடுகளுக்கு ஏற்படும். ஓடும் கார்களை நிறுத்தலாம், கடைகளை செயலிழக்கச் செய்யலாம் என்று டென்மார்க்கின் திரவநிலை இயங்கியலை சீனா குழப்பியடிக்க முடியும்.
மேலை நாடுகளுடன் மோதி உலகின் முதலிடத்தை கைப்பற்ற முயலும் சீனாவிடம் இன்றுள்ள நிலையில் எதையும் நம்பி ஒப்படைப்பது சரியானதல்ல என்பது இராணுவ ஆய்வு நிபுணர்களின் அச்சமாகும்.
ஆனால் டென்மார்க் தொலைத் தொடர்பு சேவையான ரிடிசியில் சீர்திருத்தங்களை செய்யும் பணியில் சீனா வெகு தொலைவு போய்விட்டது. பிரிட்டன் கூறினால் உடனடியாக சீனாவை உடனடியாக தூக்கி வீச முடியாது என்றும், இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்று வேறு சில பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குவாவிஸ் மலிவு விலையில் தொலைபேசிகளை விற்கிறது. இந்த ஆண்டு மட்டும் 153 மில்லியன் தொலைபேசிகளை விற்றுள்ளது. அத்தோடு இந்த நிறுவனம் அமெரிக்க கைத்தொலைபேசி உற்பத்திக்கு நேரடி எதிரியாகவும் இருக்கிறது.
குவாவிஸ் நிறுவன நிதி முகாமையாளர் கடந்த டிசம்பர் 1ம் திகதி கனடா வான்கூவரில் கைதாகி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் அடுத்த கட்டத்திற்கு போக இருக்கிறது.
இப்படியெல்லாம் வருமென டென்மார்க் நினைக்கவில்லை அம்மா..!
அலைகள் 07.12.2018 இரவு