பிரமிட்டின் உச்சியிலிருந்து நிர்வாணப் புகைப்படம்
டென்மார்க்கின் இளம் ஜோடி ஒன்று எகிப்தில் உள்ள பிரமிட் ஒன்றின் மேல் ஏறி நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததும், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற காணொளியை வெளியிட்டதும் எகிப்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புகைப்படக்காரரான டேனிஸ் பிரஜையான அண்ட்றியாஸ் இது மகிழ்ச்சி தரும் செயல் என்று தான் நினைத்ததாக தெரிவிக்கிறார். ஆனால் எகிப்திய அரசோ தமது கலாச்சரத்திற்கும், பிரமிட்டுகளின் பெருமைக்கும் இவர்கள் களங்கம் கற்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறதென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். காரணம் பொது இடத்தில் நிர்வாணமாக நிற்பது எகிப்திய சட்டங்களின் படி குற்றச் செயலாகும். ஆனால் டேனிஸ்காரர் இப்போது எகிப்தைவிட்டு வந்துவிட்டதால் தப்பிப் பிழைத்திருக்கிறார். ஆனால் இவர் எகிப்து செல்ல முடியாது.
உலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகளின் குறுஞ்செய்திகள்
————————————————————
சந்தேக நபர்களை ஒப்படைக்க சவுதி மறுப்பு..!
சவுதி அரேபியா தமது பிரஜைகள் எவரையும் விசாரணைக்காக துருக்கியிடம் ஒப்படைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கியை துருக்கியில் உள்ள சவுதி தூதராலயத்தில் வைத்து கொன்றுவிட்டு, சவுதிக்கு திரும்பிய முக்கிய சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி கேட்டிருந்தது ஆனால் சவுதி மறுத்திருக்கிறது. சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
——————-
டென்மார்க்கில் இருவர் படுகொலை
டென்மார்க்கில் உள்ள தெற்கு புய்ன் பகுதியில் அமைந்திருக்கும் கல்நேஸ் என்ற நகரில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளர். ஓர் ஆண், ஒரு பெண்ணின் சடலம் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொலைச்சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
——————–
அமெரிக்க தூதுவரை அழைத்தது சீனா
சீனாவின் பகாசுர கைத்தொலைபேசி நிறுவனமான குவாவியின் நிதித்துறை நிர்வாகியான மெங் வன்சோகு கனடாவில் கைதாகியிருப்பதும், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விவகாரத்தில் சீற்றமடைந்த சீனா தமது நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதுவரை நேரடியாக அழைத்து பேசியிருக்கிறது. முன்னதாக இந்தக் கைதிற்கு கனடாவே முழுமையான பொறுப்பு என்றும் : அத்தனை விளைவுகளையும் கனடா சந்திக்க நேரிடும் என்றும்: விளைவுகள் கடுமையாக இருக்கும் : என்றும் சீன பிரதமர் கனடாவுக்கு எச்சரிக்கை வழங்கியிருக்கிறார்.
கனடாவில் இப்பெண்மணிக்கு எதிரான விசாரணைகளில் அமெரிக்க வங்கி முறையை ஏமாற்றி ஈரானுக்கு பணம் மாற்ற உதவினாரா என்று வினவப்பட்டுள்ளது. இப்பெண்மணி பாராதூரமான குற்றச் செயல்களை செய்திருக்கிறார். விடுதலை செய்தால் தனக்கு எதிரான சாட்சியங்களை எல்லாம் அழித்துவிடுவார் என்று கனேடிய சட்டத்தரணி வாதிட்டார்.
————–
அமெரிக்காவின் துப்பாக்கிப் பிரயோகங்கள் உச்சம் தொட்டன
அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களில் 2018 ம் ஆண்டு உச்சம் தொட்ட ஆண்டாக இருக்கிறது. மொத்தம் 94 துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன.
2006ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 60 வீதம் அதிகரிப்பாகும். அப்போது நடைபெற்றது மொத்தம் 59 துப்பாக்கிச் சூடுகளாகும்.
2015ம் ஆண்டு 45 ம் 2016ம் ஆண்டு 43 ம் பாடசாலைகளில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களாக இருக்கின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு துப்பாக்கிப்பிரயோக கொலைகளில் புளோரிடாவில் 19 வயது நபர் நடத்திய பாடசாலை துப்பாக்கிப் பிரயோகங்களில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர், இதுவே ஒரே தடவையில் நடைபெற்ற அதி கூடிய இழப்புத் தொகையாகும்.
அலைகள் 09.12.2018