பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முறனானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
————–
தமது அரசாங்கத்தில் பல குறைபாடுகள் இருந் ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளினதும் கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்த அவர், அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிக மந்தமாக இடம்பெற்றதாகவும் சபையில் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் துறையில் பெரும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற் படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்று கையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றி ய அவர்; ஒக்டோபர் 26 இல் இடம்பெற் சூழச்சியைத் தோல்வியுறச் செய்வதற்கான இந்த பிரேரணையில் விவாதித்தவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.