ஜன நாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ லாஃப்கிரின் சுந்தர் பிச்சையிடம், ”அமெரிக்காவில் சமீபத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக முட்டாள் (idiot) இருக்கிறது . அந்த வார்த்தையை கூகுளில் தேடும்போது ஏன் அதிபர் ட்ரம்பின் படம் காட்டுவது ஏன்?”என்று கேட்டார்.
அதற்கு சுந்தர் பிச்சை பதிலளிக்கும்போது, ”இதில் கூகுளுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. கூகுளில் நீங்கள் ஒன்றை தேடினால் லட்சணக்கான பயன்பாட்டாளர்கள் அதற்கு எந்த கீ வேர்டை பயன்படுத்துகிறார்களோ அதன் அடிப்படையில்தான் உங்களுக்கான முடிவை காட்டும். சில நேரங்களில் இது பிரபலங்களின் அடிப்படையிலும் முடிவை காட்டலாம்.
எனவே இதற்காக உங்கள் போன் பின்னால் சிறிய நபர் அமர்ந்துக் கொண்டு நீங்கள் தேடுவதற்கான முடிவை அவர் காட்டுகிறார் என்று அர்த்தமில்லை. உங்கள் தொலை பேசியை கூகுள் உருவாக்குவதில்லையே ” என்றார்.