பறிபோகிறது சம்மந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி

இலங்கையின் ஊடகங்கள் சம்மந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோனதாக எழுதாது மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக அறிவிப்பு என்று எழுதியுள்ளன.

இதற்காக இப்போது ஓர் கண்துடைப்பு எதிர் விவாதம் நடைபெறுவதாகவும் தெரிகிறது.

மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஐ.தே.கவின் சபாநாயகர் கரு. ஜெயசூரியாதான் அறிவித்துள்ளார். இவர் ரணில் பிரதமர் என்பதற்கு பட்ட பாடு தெரிந்ததே. இப்போது மௌனமாக சம்மந்தரை அகற்றியது போல ரணிலை அகற்ற மறுத்தது ஏன்..?

பொதுவாக கூட்மைப்பு ரணில் பக்கம் சாய்ந்தால் மைத்திரி தரப்பு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்கும் என்பது இயல்பானதே.

தமிழர்களுக்கு அதி கூடுதலான பதவி எதிர்கட்சி தலைவர், இந்துகலாச்சார அமைச்சர் போன்ற அல்லாடி பதவிகளையே வழங்குகிறார்கள்.

தமிழர் ஒருவரை பிரதமராக நியமிக்க இலங்கை பாராளுமன்றுக்கு வக்கிருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. கறுப்பரான ஒபாமாவை பிரதமராக்கிய அமெரிக்காவில் நடந்தது சாதனை அல்ல இலங்கையில் ஒரு தமிழர் பிரதராக ஆனால் அதுவே உலக சாதனையாகும்.

சிங்கள மக்களில் ஒருவர் ஜனாதிபதி என்றால் தமிழர் பிரதமராக இருக்க வேண்டும், இல்லை தமிழர் ஜனாதிபதியானால் சிங்கள மக்களில் ஒருவர் பிரதமராக இருக்க வேண்டும் என்ற சட்டம் அவசியம் இல்லையேல் இனிச் சிக்கல் தொடரும்.

இது சிறிய சம்பவமானாலும், எதிர்க்கட்சி தலைவரான சம்மந்தன் ஒரு றப்பர் ஸ்டாம்பு மட்டுமே என்றாலும், சம்மந்தரின் பதவியை பறிப்பது தமிழர்கள் இனரீதியாக பழிவாங்கப்பட்டார்கள் என்ற கருத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூட சிங்கள தலைவர்கள் சிந்திக்கவில்லை.

இனப்பிரச்சனை தீர்வு என்று கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டது ஒரு பக்கம் இப்போது தெருவில் வீசப்படுகிறது என்ற கோபம் மறுபக்கம். சிறீலங்கா அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது. நாட்டை அமைதியாக வைத்திருக்க ஆவன செய்வதே முக்கிய பணியாகும் என்பதை ஒருவரும் எடுத்து சொல்லவில்லை.

இது குறித்த செய்தி.. :

—————-

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடியபோது சபாநாயகரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாராளுமன்றம் இன்று (18) பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகிய மூன்று எம்பிக்களும் பாராளுமன்ற ஆளும் தரப்பு வரிசையில் அமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும், ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவும் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான, மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதனையடுத்து ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியில் அங்கத்துவம் வகிப்பதால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

தற்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts