டென்மார்க் ஸ்கெயான் நகரிலும், கேர்னிங், ஸ்ரூவர் நகரங்களிலும் வசித்த சிவகுமார் குமாரவேலு ( சின்னக்கண்ணன் ) நேற்று 20.12.2018 அன்று காலமானார்.
அன்னார் தாயகத்தில் கரணவாய் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவராகும். 23.11.1966 ம் ஆண்டு பிறந்த இவர் தாயகப்பற்று, கலைத்துறை போன்றவற்றில் நிறைந்த ஆர்வம் கொண்டவராகும்.
ஆரம்பகாலங்களில் தாயகத்தின் விடுதலைக்காக அளப்பரிய தெண்டாற்றியவர். பின்னர் ஸ்கெயான், ராம், றிங்குபிங் நகரங்களின் டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து கலை முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டவராகும்.
இவர் சிறந்த நாடக நடிகராக இருந்தவர். பல நாடகங்களில் நடித்து தனக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய, காலத்தில் பூத்த நல்லதோர் கலைஞனாக இருந்தவர்.
இவர் நடித்த பாத்திரங்களில் முக்கியமானது மான்குட்டி என்ற பாத்திரமாகும். இன்றுவரை மக்கள் மனங்களில் இருந்து நீங்காத பாத்திரமாக அவர் நிலைத்து நிற்கிறார்.
எல்லோர் மீதும் அன்பும், சிரித்த முகமும், உதவும் குணமும் கொண்ட அன்னாரது பிரிவு அவரை அறிந்த அனைவருக்கும் பெரும் இழப்பாகும்.
எப்பொழுது பார்வையிடுவது, இறுதிக்கிரியைகளுக்கான விபரங்கள் யாவும் பின்னர் தரப்படும். இதுவரை கிடைத்த தகவல்களின்படி மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னமும் பூரண தகவல் போலீசாரிடமிருந்து கிடைக்கவில்லை.
வரும் வியாழன் தகவல்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது.
தொடர்பு கொள்ள : ஸ்கெயான் நகரில் வாழும் க. விஜயகுமார் : 97354662
கைத்தொலைபேசி : 42300484
திரு. பாலகுமார் சுப்பிரமணியம் ( Herning ) : தொலைபேசி : 96991124
மேலதிக விபரம் பின்னர் தரப்படும்.
அலைகள் 21.12.2018