இரட்சகர் உங்களுக்குப் பிறந்திருக்கிறார்.
போதகர். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
தேவதுதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11
உன்னதத்தின் ஆறுதல் வாசகநேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நத்தார் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கிறிஸ்த்துவின் பிறப்பென்றால் என்ன? இது ஒரு தேவ அன்பின் அடையாளம். இதை நாம் யோவான் 3:16இல் அறிந்து கொள்ளலாம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். அதாவது பாவம் செய்து தேவ மகிமையற்று வாழும் மக்களை இயேசுகிறிஸ்த்துவை விசுவசிப்பதன் மூலம் நித்தியஜீவனை அடைந்து முடிவில்லா வாழ்வை கண்டடைந்து கொள்ளும்படியாக பிதாவாகியதேவன் இயேசுவை உலகிற்கு அனுப்பினார்.
இதை நாம் இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள ஏசாயா 61:1-3 வரை வாசிப்போம். கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்@ சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்@ இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும் (நன்மையை அடையும் காலத்தையும்), நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். கிறிஸ்த்து இயேசு என்னும் இரட்சகரின் பிறப்புக்கான காரணத்தை பிதாவாகிய தேவன் ஏசாயா என்னும் தீர்க்கதரிசி மூலம் இவ்வாறு உலகிற்கு வெளிப்படுத்தினார்.
ஏன் மக்கள் பயந்தார்கள்? தேவபிரசன்னம், தேவதூதர்களின் பிரசன்னம் மக்களுக்கு ஆதிகாலத்தில் ஒருவித பயத்தைக்கொடுத்திருந்தது. அதனால் மேய்ப்பர்கள் பயந்தார்கள். தேவதூதர்கள் அவர்கட்கு கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்னும் ஓர் நல்ல செய்தியை அறிவித்தான். ”தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவாக்கினார்”. அதாவது மக்கள் தாம் நெருக்கப்படுகையில் தேவனை நோக்கி தங்களை விடுவிக்க ஒரு இரட்சகரை அனுப்பும்படி வேண்டினர். இதை நாம் நெகேமியா 9:27இல் காணலாம். ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர், அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை (இரக்கம் பெறும் சூழ்நிலைகளை) அவர்களுக்குக் கொடுத்தீர். தேவன் மக்களின் வேண்டுதலுக்கு செவிகொடுத்தார்.
பாவிகளை இரட்சிக்கவந்த இரட்சகர்.
அதாவது பிதாவாகிய தேவனின் விருப்பத்தை செய்ய உலகிற்கு வந்தார். இதை நாம் முன்னர் யோவான் 3:16. வாசித்துள்ளோம். இதை நாம் யோவான் 6:38 இல் காணலாம். என் சித்தத்தின் படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந் திறங்கிவந்தேன். இழந்ததை தேடவும் கண்டுபிடிக்கவுமே இயேசு உலகத்திற்கு வந்தார்.
இதை விளங்கிக்கொள்ள லூக்கா 15ம் அதிகாரம் முழுக்க வாசித்தால் அறிய முடியும். அதி. 15:1-6 சகலஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபார கரும் முறுமுறுத்து, இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது, உங்களில் ஒரு மனுஷன் நு}று ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணு}ற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக்கண்டு பிடிக்குமளவும் தேடித் nதிரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத்தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத் தாரையும்கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணு}ற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவி யினிமித்தம் பரலோகத்தில் மிகுந்தசந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவனை அறியாத மக்களை, தேவனை விட்டு விலகிவாழும் மக்களை தேவனிடம் சேர்க்கும்படியாக இயேசு உலகத்திற்கு வந்தார்.
மனித அன்பிற்கும் தேவ அன்பிற்கும் உள்ள வேறுபாட்டைக்காட்டவே தேவன் இயேசுவை உலகிற்கு இனுப்பினார்.
மனித அன்பு என்பது ஓர் ஒப்பந்தவடிவில் அமைந்தது. நீ என்னை நேசித்தால் நான் உன்னை நேசிப்பேனன். தேவ அன்பு என்பது நீ என்னை அன்புகூராவிட்டாலும் உன்னை அன்புகூருவேன் என்பதாகும். இது உடன்படிக்கையின் அன்பு. மற்றவர் உடன்படிக்கையை மீறினாலும் உடன்படிக்கையை உடைத்துப்போடாதபடி தொடர்ந் தும் மற்றவர்களின் நலனுக்காகச் செயற்படுவது உடன்படிக்கையின் அன்பாகும். கிறிஸ்த்துவின் பிறப்பில் வெளிப்பட்ட தேவனின் அன்பானது அவரது தெய்வீக உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது. ஆம் நாம் பாவிகளாக இருக்கையில் கிறிஸ்த்து நம்மில் அன்புகூர்ந்தார். அந்த அன்பை வெளிப்படுத்தவே அவர் மனிதனாக இந்த உலகத்தில் வந்துதித்;தார்.
நமக்கொரு இரட்சகர் பிறந்துவிட்டார் என்ற நற்செய்தி பாவத்திலிருந்து மட்டுமல்ல அந்த பாவத்தின் சாபமாகிய வேதனைகளில் வாழும் மக்களாகிய நமக்கும் விடுதலையை பெற்றுத்தருகிறது. எனவே இந்த இரட்சகரின் பிறப்பு நமக்கு, நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலற்ற மக்களுக்கு ஆறுதலையும், துயரத்தோடு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டுவரும் ஓர் நல்ல செய்தியாகட்டும். இந்த நம்பிக்கையின் நல்ல செய்தி, நமது துயரங்களை தேவனைத் துதிக்கும் துதியாக மாற்றட்டும்.
அன்பின் இயேசுவே, நம்பிக்கை இழந்துவாழும் எனக்கு உமது பிறப்பு புது நம்பிக்கையையும், பாவஉலகில் வாழும் எனக்கு புதிய விடுதலையையும், ஆறுதலற்ற எனக்கு ஆறுதலையும் தர வந்தீர் என்று அறிய உதவிசெய்ததற்காக உமக்கு நன்றி அப்பா. தேவ அன்பின் தன்மையை இன்று நீர் எனக்கு அறிந்து கொள்ளக்கூடிய வேளையை தந்தீர் அப்பா. எனது வாழ்வில் உமது கிருபையையும் இரக்கத்தையும் தினமும் கண்டுகொள்ள உதவி செய்யும் பிதாவே, ஆமென்.
நத்தார் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for