அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று வானில் நடந்த மாற்றத்தைக் கண்டு வேற்று கிரகவாசிகள் வந்துவிட்டார்களா? என்று அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வினோதம் நடந்தது.
வியாழக்கிழமை இரவில் வானம் வழக்கமான வண்ணத்துக்கு மாறாக கூடுதல் நீல நிறத்தில் ஆங்காங்கே பிரகாசமாகத் தெரிய அமெரிக்க மக்கள் அதனைத் தங்கள் கைப்பேசியில் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் பதிவிடத் தொடங்கினர்.
நியூயார்க் நகருக்கு வேற்றுகிரக வாசிகள் யாராவது படை எடுத்து வீட்டர்களா? என்று பலரும் பதிவிட இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் மின் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாகத்தான் வானம் கூடுதல் வெளிச்சத்துடன் காணப்பட்டது என்று அமெரிக்க ஊடங்கள் செய்தி வெளியிட்டன.
இதுகுறித்து நியூயார்க் தீயணைப்பு துறை தரப்பில், ”Long Island City -யில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் வியாழக்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது. மேலும் இதே மாதிரியான மின் விபத்து அஸ்டோரியா நகரத்திலும் ஏற்பட்டது. இதன் காரணமாகவே வானம் கூடுதல் வெளிச்சத்துடன் காணப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த விபத்தின் காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவிலை” என்று தெரிவித்தன.