பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சனா ஜோலி தனது குழந்தைகள் போராடும் குணம் படைத்தவர்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சனா ஜோலி இன்று பிபிசி வானொலிக்கு ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதில் தனது குழந்தைகளின் நிறைகுறைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நேர்காணலில் ஏஞ்சலினா பேசியதாவது:
எனது குழந்தைகள் ஒரு நல்ல போராடும் குணம் கொண்டவர்கள். அது மிகவும் அதிசயமும் அசாதாரண ஒன்றும் ஆகும்.
அதேநேரம் குழந்தைகள் மிகமிக சரியாக நடந்துகொள்ள வேண்டுமென்று நான் எப்போதுமே விரும்புவதில்லை.
குழந்தைகள் இரண்டு காரியங்களை செய்ய முடியும். ஒன்று அவர்கள் கூட உங்களை வளர்க்கலாம். அதேநேரம் அவர்கள் மிருக உணர்வைக்கூட பெறலாம்.
அவர்கள்தான் தங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி எனக்குள்ள ஒரே கவலை அவர்கள் அதிகம் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள் என்பதுதான்.
இவ்வாறு ஏஞ்சலினா ஜோலி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலினாவின் குழந்தைகள் மாடக்ஸ் (17), பேக்ஸ் (15), சஹாரா (13), ஷைலா (12) மற்றும் இரட்டைக் குழந்தைகள் விவியென் மற்றும் நாக்ஸ் (10) ஆகியோர் ஆவர். தனது முன்னாள் கணவர் பிராட் பிட்டுடன் இணைந்து இதில் சில குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்தனர்.
சால்ட் (2011) படத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்த ஏஞ்சலினா ஜோலி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒருமுறை ஆஸ்கர் விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.