டென்மார்க்கில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் பலர் சர்க்கரை வியாதி இலக்கம் இரண்டில் சிக்குண்டு துயர்படும் ஆபத்து இருப்பதாக இன்றைய காலைச் செய்தி தெரிவிக்கிறது.
காரணம் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது டென்மார்க்கில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2008ம் ஆண்டு 1758 கர்ப்பிணிகள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர், 2014ல் இந்தத் தொகை 2059 ஆக உயர்ந்தது 2017ம் ஆண்டு 2532 ஆக எகிறியிருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு சர்க்கரை வியாதி – 2 ஐ சந்திக்க பல காரணங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான காரணம் இப்பெண்கள் அளவுக்கு மீறிய நிறை கொண்டிருப்பதாகும்.
2017ம் ஆண்டு கணக்குகளின்படி டென்மார்க்கில் ஒவ்வொரு மூன்று பெண்களுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் நிறை கூடிய பெண்களாக இருக்கிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி – 2 ற்கான ஆபத்து அதிகமாகவே இருக்கிறது.
தாய் சர்க்கரை வியாதியடைந்திருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் இதனால் வயிற்றில் உள்ள குழந்தைஎ அதிக சர்க்கரையை உவியும். இதனால் குழந்தைக்கு பசி அதிகரிக்கும். விளைவு அது அதிக உணவை உண்ணும், முடிவாக குழந்தை நிறைகூடிப் பிறக்கும்.
பிற்காலத்தில் இந்த பாதிப்பு கண்ட தாய் பிள்ளை இருவருமே சர்க்கரை வியாதி – 2 னால் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நிறை கூடியோர் அதிகமாக இருக்கும் ஐரோப்பிய நாடு டென்மார்க் என்பது கவனிக்கத்தக்கது.
அலைகள் 30.12.2018 ஞாயிறு