இந்திய தமிழ் சினிமா இந்த ஆண்டு விட்ட முதலை உழைக்கவில்லை. மொத்தச் செலவு 1600 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்தது 1275 கோடி ரூபாய்கள்.
ஏற்பட்ட 325 கோடியில் 225 கோடி ரூபாவை இழந்துள்ளவை மூன்று கோடி ரூபாய்க்கு குறைவான பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களே.
இந்த ஆண்டு 181 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மற்றைய படங்கள் விட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது.
ஐம்பது கோடிகளுக்கு மேல் செலவிட்டு எடுக்கப்பட்ட படங்கள் ஏழு, ஐம்பது கோடிக்கு கீழ்; எடுக்கப்பட்ட படங்கள் ஒன்பது. 20 கோடிக்குள் நான்கு படங்கள். 15 கோடிக்குள் கீழ் 10 படங்கள். எட்டு கோடிக்குள் 23 படங்கள், 5 கோடிக்குள் 32 படங்கள், மூன்று கோடிக்கு கீழ் உருவான படங்கள் 91 ஆகும்.
பொதுவாக சிறிய பட்ஜட் படங்கள் வெற்றிபெறுவது தமிழகத்தில் சிரமம், அதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது. சிறிய படங்கள் விட்ட பணத்தை இழந்துள்ளன.
அது போல பாகம் இரண்டு என்ற பெயரில் வெளியான திரைப்படங்கள் பல சரிந்து விழுந்துள்ளன.
தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய முக்கிய காரணமாக தரமற்ற கதை இல்லை, கதை சொன்ன முறை தவறு என்று ஏகப்பட்ட தவறுகள் இடம் பெற்றுள்ளன.
2.0 வருமானத்தில் வெற்றி பெற்றதாக உலக அளவில் பேசினாலும் வெளிநாடுகளில் சில நாடுகளில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சில படங்கள் ஆகா ஓகோ என்று பேசப்பட்டன அவை சிறிய பட்ஜட் படங்களாக இருந்தன. அவற்றின் தயாரிப்பாளர் பணத்துடன் இருந்த காரணத்தால் நல்ல படம் என்று போலியாக பிரச்சாரம் செய்து வருமானம் பெற்றனர். ஆனால் அவை உண்மையாகவே நல்ல படங்கள் அல்ல.
மக்கள் அறிவு பெருகி வருகிறது, ஆனால் படங்கள் லாஜிக் இல்லாமல் வருகின்றன. உதாரணம் மாரி – 2 படத்தில் தனுஷ் எல்லோரையும் அடித்து துவைப்பது.
தமிழகத்தில் வெளியான படங்களில் 99 வீதமான படங்களில் லாஜிக் இல்லை இதுவே பெரும் குறைபாடு.
அலைகள் 31.12.2018 செவ்வாய்