அரசாங்க நிறுவனங்கள்,மலைநாட்டு பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லயின் பொறுப்பின் கீழ் எந்தவொரு முக்கியமான அரசாங்க நிறுவனமும் கொண்டுவரப்படவில்லை.
அந்த அமைச்சுக்குரிய பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தில் இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம், பி.சி.சி மற்றும் அரச வழங்கள் முகாமைத்துவ கூட்டுத்தாபனம் உட்பட தற்போது பெறுமளவுக்கு வங்குரோத்து நிலையிலிருக்கும் நான்கு நிறுவனங்களே அவரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அண்மைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போது ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த கிரியெல்ல மீதான நேரடித் தாக்குதலாக இது அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது.
பிரதமர் விக்ரமசிங்கவின் உறுதியான ஆதரவாளரான கிரியெல்ல ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால் விசனம் அடைந்திருப்பதாகவும்.ஆதரவாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் என்பதால் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாக அவர் நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் கூறியிருப்பதாக தெரிய வருகின்றது.