கடந்த புதன் கிழமை காலை நடைபெற்ற ரயில் விபத்தில் மரணித்த எட்டுப்பேரின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இவர்களில் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவர்.
இந்த எட்டுப்பேரில் ஒருவர் மட்டும் கிறீன்ட்லாந்து நாட்டவர் இவருக்கு வயது 30 ஆகும், மற்றய அனைவரும் டென்மார்க்கை சேர்ந்தவர்கள்.
புய்ன் கிழக்கு பகுதியில் 28 வயது பெண், வடக்கு பகுதியில் 51 வயது ஆண், மத்திய பகுதியை சேர்ந்த 27 வயது பெண், ஓகூஸ் நகரத்தை சேர்ந்த ஆண் 30 வயது, ஊதின்ச நகரத்தை சேர்ந்த 45 வயது பெண்மணி, இதே நகரத்தை சேர்ந்த இன்னொரு 60 வயது பெண்மணியும், ஸ்ரோவ கோப்பன்கேகனை சேர்ந்த 59 வயது பெண்மணியும் அடங்கும்.
இவர்களில் யாரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை, நல்லவேளையாக சிறு பிள்ளைகள் அகப்படவில்லை என்று போலீஸ் திருப்தி கூறுகிறது.
விபத்துக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை, காவ்றி கமிஷன் இரண்டு வடிவங்களில் ஆய்வு நடத்துகிறது. இரண்டு ரயில்வண்டிகளின் கறுப்புப் பெட்டிகளும் பரிசோதிக்கப்படுகிறது.
காரணம் இவர்கள் என்ன வேகத்தில் ஓடியுள்ளார்கள் என்ற மதிப்பீட்டுக்கு இது அவசியமாகும். இரண்டு பெட்டிகளின் தகவல்களும் கணினியில் ஏற்றப்பட்டு நிபுணர்கள் அதை மதிப்பிட வேண்டும். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன, இனி அறிக்கை வெளிவரவேண்டியதே பாக்கியாகும்.
முன்னர் பலமாக வீசிய காற்று ஒரு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் டிரியு பேராசிரியர் ஜாக்கப்மான் மதிப்பிடும்போது செக்கனுக்கு 21 மீட்டர் வேகத்தில் வீசிய காற்று இரும்பு வண்டிகளுக்கு ஒரு பிரச்சனையல்ல என்கிறார். சரக்கு ரயில் வண்டியின் பெட்டியை சரியாக பூட்டாமையே அது கழன்று வெளியேற காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
காற்று ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் 100 : 100 வீதம் அதுதான் காரணம் என்று கூற முடியாது. காற்று 25 மீட்டர் செக்கனுக்கு என்ற வேகத்தில் வீசினால் பாலத்தின் வழியால் ரயிலை ஓட முடியாது. 21 – 20 மீட்டர் வேகத்தில் வீசினால் ரயிலை 80 கி.மீ வேகத்தில் ஓட வேண்டும் என்கிறார்.
இது போன்ற விபத்தை முன்னர் சந்திக்காமையால் இதை மதிப்பிடுவது சிரமம் என்பதை பலர் மறுக்கவில்லை.
மறுபுறம் விபத்துக்குக் காரணமென்று கூறப்படும் டி.பி கார்கோ என்ற நிறுவனம் சரக்கு ரயில் வண்டி மூலமாக பியர் பெட்டிகளை எடுத்துச் செல்கிறது. வாராந்தம் 30 தடவைகள் இந்தப் பாலத்தை ஊடறுத்தும் இதன் பயணங்கள் நடைபெறுகிறது.
இந்த சரக்கு வண்டியில் இழுத்து செல்லப்பட்ட பெட்டி ஒன்று விடுபட்டு மின்னல்வேக விரைவு ரயினுடன் மோதியதாக கருதப்படுகிறது.
செய்தி கேட்டதும் டி.பி கார்கோ நிறுவனம் இது போல சரக்கு வண்டிகளில் பியர் போத்தல் பெட்டிகளை இனி அனுப்புவதில்லை என்று கூறியிருக்கிறது.
நஷ்டஈடு கட்டுவது யார்..? இதுதான் இப்போதுள்ள விசாரணையின் தாமதமாக இருக்க வழியுண்டு.
ரயில் வண்டிவேறு மிக மோசமான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. தொடர்கிறது விசாரணைகள்.
வருங்காலங்களில் பாலத்தால் போகும்போது மின்னல் வேக ரயில் வண்டியின் இப்போதைய 180 கி.மீ வேகத்தை குறைத்து 100 – 120 கி.மீ வேகத்தில் ஓட வேண்டும். அப்படி ஓடினால் விபத்து நடந்தால் மரணங்களை குறைக்கலாம் என்ற கருத்தொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
ரயில் வண்டிகளை மேலும் மேலும் வேகமாக்க டென்மார்க் முடிவு செய்வதால் இத்தகைய கருத்துக்கள் பொருந்துமா தெரியவில்லை.
நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் இப்போது இயல்புக்கு திரும்பியுள்ளன. 1988ம் ஆண்டுக்கு பின் 30 வருடங்கள் ஓடிவிட்டன டென்மார்க் இதுபோன்ற மோசமான ரயில் விபத்தை சந்தித்து.
அலைகள் 04.01.2019