உண்மையில் பாம்பென்று அடித்தாரா இதுதான் சந்தர்ப்பமென அடித்து துவைத்தாரா என்பது சந்தேகம்தான்.
ஆடை, அணிகலன்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் பெண்கள். பெண்களுக்குத்தான் விதவிதமான டிசைன்களில் உடைகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக புலி, பாம்பு போன்றவைகளின் உருவங்களும் அவற்றின் வரி, வடிவங்களும் பெண்களின் ஆடைகளில் உருவாக்கப்படுகின்றன.
அப்படித்தான் இஸ்லாமாபாத்தில் ஒரு பெண், பாம்பைப் போன்ற உருவ, வடிவம் கொண்ட கால்சட்டையை (stockings) அணிந்திருந்தார். அதுவே அவருக்கு வினையானது.
கணவன் வரத் தாமதமானதால், படுக்கை அறையில் இரவு விளக்கை மட்டும் எரியவிட்டுவிட்டுத் தூங்கினார் மனைவி. இரவு தாமதமாக வந்த கணவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறைவான வெளிச்சத்தில் படுக்கையின் மீது இரண்டு பாம்புகள் இருந்ததுபோலத் தெரிந்துள்ளது. உடனே அருகிலிருந்த பேஸ்பால் மட்டையால் அவற்றைச் சரமாரியாகத் தாக்கினார்.
உடனே மனைவி வலியால் அலறித் துடித்தார். இதனையடுத்து உண்மையை அறிந்த கணவன், உடனடியாக மனைவியை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் பெண்கள் உடையைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், மனைவி உறங்குவதைக் கூட அடையாளம் காண முடியாதா என்று மற்றொரு சாராடும் வாதிட்டு வருகின்றனர்.