முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
———-
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அந்தக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும், கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே என்றும் அவர் கூறியுள்ளார்.
அது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
————