டென்மார்க்கின் மலிவு விலை கடைத்தொகுதிகளில் ஒன்றான றீமா 1000 கடைத் தொகுதியில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பார்டி பூல்சர் பாக்கட்டுக்களில் உள்ள பூல்சர்களில் அரைத்த இறைச்சியுடன் இரும்புத்துகள்களும் கலந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாக்கட்டுக்கள் டென்மார்க் முழுவதும் உள்ள றீமா 1000 கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரும்புத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டவுடன் பூல்சர்களை தயாரித்த றய்டன் டிஸ்ரிபியூசன் ஏ.எஸ் உடனடியாக பாக்கட்டுக்களை திருப்பி எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்குள் யாராவது இந்த பாக்கட்டுக்களை வாங்கியிருந்தால் அவற்றை வீசி விடுங்கள் இல்லை எந்தக் கடையில் வாங்கினீர்களோ அங்கேயே திருப்பி வழங்கி பணத்தை பெறுங்கள் என்று நுகர்வோர் அமைப்பு கூறுகிறது.
அது சரி எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்கிறீர்களா..?
இது பார்டி பூல்சர் என்ற பெயரில் 500 கிராம் கொண்ட பாக்கட்டாக இருக்கும்.
உற்பத்தி செய்யப்பட்ட திகதி 19.12.2018 ஆகும் பாவிக்கக் கூடிய கடைசித் திகதி 16.01.2019 ஆகும்.
நீங்களும் வாங்கியிருந்தால்..
உங்கள் பாக்கட்டிலும் இதே உற்பத்தி காலவதியாகும் திகதிகள் இருந்தால் அது பார்டி பூல்சராக இருந்தால் உஜாராகுங்கள்.
சாப்பிட்டால்..
பற்கள் பாதிக்கப்படும்..( இருந்தால் )
வாயில் காயம் ஏற்படும்..
குடரில் பாதிப்பை ஏற்படுத்தும்..
எச்சரிக்கை என்கிறார்கள்..
அலைகள் 10.01.2019 வியாழன்