வாடைக்காற்றுக்கு மகிமை கொடுத்த மகத்தான பட்டப்போட்டி..
பொங்கல் நாளுக்கு பட்டங்களால் பெருமை கொடுத்த பட்டப்போட்டி..
ஆனாயத்தில் அழகான கோலங்களை வரைந்த அற்புதமான பட்டப்போட்டி..
தமிழன் பெருமையை வான வெளியில் எழுதி வானுயர்ந்த பட்டப்போட்டி..
ஆடல் பாடல்களுடன் அமைதியாய் முடிந்த அழகிய பட்டப்போட்டி..
உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற ரியூப்தமிழ் இளைஞர்களுக்கு உலகம் வாழ்த்துரைத்த பட்டப்போட்டி..
வவ்வாலும், கொக்குமாக கிடந்த பட்டமேற்றும் வானில் விசித்திரமான பட்டங்களை பறக்கவிட்டு புகழ்மிக்க புதிய வரலாற்றை எழுதிய பட்டப்போட்டி..
போருக்கு பின்னர் மறுபடியும் மீண்டெழுகிறது வல்வை மண் என்ற மகத்துவத்தை பறைசாற்றிய பட்டப்போட்டி..!
நாம் சாதிக்க ஏராளம் ஏராளம் புதுமைகள் இருக்கிறது தோழா.. வீணாக ஒரே முறையில் செக்குமாடு போல வாழாது கொஞ்சம் உன் குறுகிய வட்டங்களை விட்டு வெளியே வந்துபார் தோழா..!
உனக்காக வானம் கூட அழகான இடத்தை ஒதுக்கிக் காத்திருக்கிறதென தாயக மக்களுக்கு இயற்கை சொன்ன செய்தியாகவும் அமைந்த பட்டப்போட்டி..
அன்று காற்றின் துணையுடன் அன்னபூரணியில் ஏறி அமெரிக்கக் கரையைத் தொட்ட அழகிய தமிழ் தோழா இன்று பட்டங்களாலும் உலகத்தின் விட்டங்களை தொட்ட செயல் வீரா..!
வாடைக் காற்றை மந்திரமாக்கி மகத்துவம் புரியலாம் என்ற மகிமையை சொன்ன பட்டப்போட்டி திருவிழா..!
தமிழகத்தின் பாடகர்கள் தாங்கள் பாடினால் இந்த மண்ணில் பாட வேண்டுமென பெருமை கொண்ட திருநாள் இந்தப் பட்டப்போட்டி திருநாள் என்று இதன் பெருமையை அடுக்கிச் செல்ல முடியும்.
இந்தப் போட்டியில் முதலிடத்தை விநோத சமையலறை என்ற பட்டத்தை அமைத்த ம. பிரசாந் பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் இடத்தை ராதையும் புஸ்ப்பக விமானமும் என்ற பட்டத்தை அமைத்த த. தயாளன் பிடித்துக்கொண்டார்.
மூன்றாம் இடத்தை றியல் வின் பீரங்கி என்ற பட்டத்தை அமைத்து ஸ்ரீ நிரோசன் பெற்றுக் கொண்டார்.
இம்முறை பட்டத் திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் சீருடைக்கு ஒத்த நிறத்தில் உள்ள தரை மற்றும் கடலில் தாக்குதல் நடத்த கூடியவாறான போர் டாங்கி மற்றும் படகு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
“செய் அல்லது செத்துமடி” எனும் வாசகத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் கரும்புலியான அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டங்கள் பறப்பதில் முக்கியமான விடயம் இரு பக்கங்களும் சமநிலையாக இருப்பது.. அடுத்தது சரியாக உச்சி கட்டுவதும் சமநிலையை பேணுவதுமாகும். இயற்கையின் சமநிலையையும் காற்றின் போக்கையும், அளவையும் பொறுத்து பட்டங்கள் வெற்றிகரமாக பறக்கும்.
04. மங்கையுடன் தையல் இயந்திரம்
05. கல்லுடைக்கும் இயந்திரம்
06. படகு வலிக்கும் மீனவர்கள்
07. 3 டி கொக்கு
08. கான்ட் றில்
09. பறக்கும் சிறுவர் பூங்கா
10. இராட்சத கடல் மிருகமும் சித்திர குள்ளனும்
11. தைத்திருநாள் கொண்டாட்டம்
12. விண்வெளி வானிலை மையம்
13. விமான நிலையம்
14. இராணுவ பீரங்கி
15. சுழல் நட்சத்திரம்
அலைகள் 16.01.2019 புதன்