ரியூப் தமிழ் மிதிவண்டி ஓட்டப் போட்டி 2019 வெற்றி..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரியூப் தமிழ் நடத்தும் மாபெரும் மிதிவண்டி ஓட்டப்போட்டியில் யாரும் எதிர்பாராதவிதமாக பெருந்தொகையாக போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

நல்லூர் ஆலய முன்றலில் தமிழர் கூட்டமைப்பு பா.உ மாவை சேனாதிராஜா அவர்களினால் இந்த போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது கிளிநொச்சி நோக்கி வெற்றிகரமாக போட்டியாளர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

பதினேழு வயது முதல் 65 வயது வரை பல்வேறு வயது எல்லையில் போட்டியாளர் வேகமெடுத்துள்ளனர்.

போருக்கு பிந்திய யாழ். மண்ணில் மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த இளைஞரிடையே ஒரு வாழ்க்கை நம்பிக்கையை உருவாக்க ரியூப்தமிழ் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி நிகழ்ச்சி மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் இதற்கு பலத்த வரவேற்பு காணப்படுகிறது.

போட்டியில் முதலிடத்தை பெற்று 2019ம் ஆண்டின் ரியூப்தமிழ் சாம்பியன் கிண்ணத்தையும் 50.000 ருபா பணப்பரிசையும் ஜி.என்.தர்சிகன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது இடத்தை பிடித்து 30.000 ரூபா பரிசையும் வெற்றிக்கிண்ணத்தையும் சி.பாலராஜன் பெற்றார்.

மூன்றாவது இடத்தை பெற்று 20.000 ரூபா பணப்பரிசையும் வெற்றிக்கிண்ணத்தையும் இரா. நிதர்சன் பெற்றார்.

இவர்களுக்கான பரிசை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா வழங்கினார். போட்டியில் பங்கேற்றவர்களில் 13 பேர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

யாதொரு பிரச்சனையும் இல்லாமல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது.

வெளிநாடுகளில் நடக்கும் சைக்கிள் ஓட்டப் போட்டிகளை விட தயாக மண்ணில் நடக்கும் போட்டிகளின் அழகு தனியழகாக இருக்கிறது.

பார்க்கும் போது மனம் மகிழ்வு தருகிறது. ரியூப் தமிழ் பெருமையுடன் வழங்கும் 2019ம் ஆண்டின் இரண்டாவது பெரிய பாய்ச்சலாகும்.

நேற்றைய தினம் உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் நடந்த பட்டப் போட்டியில் உற்சாகமாக பங்கேற்று அதை உலக மன்றுக்கு வெற்றிகரமாக தந்த ரியூப்தமிழ் அணி இன்று உறங்காமலே மிதவண்டி ஓட்டப்போட்டியில் களமிறங்கியிருப்பது பெரிய சாதனையாகும்.

தாயக இளைஞர்களை டென்மார்க்கில் இருந்து நெறிப்படுத்தும் இளைஞர் ரவிசங்கர் சுகதேவனின் சாதனை பாராட்டுக்குரியதாகும்.

நாளை மறுதினம் அடுத்த புதிய பாய்ச்சல் இடம் பெற இருக்கிறது. காண ஆவலாக இருங்கள்.

அலைகள் 16.01.2019

Related posts