தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் மிதிவண்டி ஓட்டப்போட்டி நடைபெற்றது தெரிந்ததே.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அறுபது வீரர்களுக்கு உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
நமது தாயக உறவுகளுக்கு ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் வாசிக்கப்படும் அதி சிறந்த புத்தகங்கள், தாயகத்தின் தேவை அறிந்து புதிதாக தாயகத்திற்கு ஏற்ப எழுதப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
தாயகத்தின் புத்தக சந்தை உருவாக்க முயற்சியானது, தாயக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புதிய பாதை போட்டுக் கொடுக்கும் அரிய முயற்சியாகும்.
இந்தப் பணியின் முதற்கட்டமாக உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இலவசமாக வழங்கப்படுகிறது.
பாடசாலைகள், விளையாட்டு வீரர்கள், கழகங்கள் என்று பல தரப்பிலும் வாசிப்பு முயற்சிகளை தூண்டிவிட்டு, சமுதாய அறிவை மேம்படுத்தும் பணிகள் விரிவாக்கப்படுகின்றன.
ரியூப்தமிழின் இலங்கை பணிப்பாளர் திருமதி டிவான்யா முகுந்தன் தலைமையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாயக எழுத்தாளர் கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும் நிகழ்வொன்றும் இடம் பெறவுள்ளது.
கடந்த 16.01.2019 நல்லூர் வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினால் போட்டி தொடக்கி வைக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்ட மிதிவண்டியோட்ட நிகழ்வின் அரிய தருணத்தில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் இந்த நூல் வழங்கப்பட்டது.
வரும் நாட்களில் புத்தகங்கள் வழங்கும் பணிகள் புத்தாண்டின் அடுத்த பாய்ச்சலாக ரியூப்தமிழ் முன்னெடுக்க இருக்கிறது.
அலைகள் 18.01.2019 வெள்ளி