பொங்கல் விழா இந்த ஆண்டு புலம் பெயர் தமிழ் மக்களிடையே ஒரு புதுக் கோலம் பூண்டுள்ளது. இதன் மாற்றம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் நிகழ்வுகளை உருவாக்க அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
தமிழ் மொழி மீது பற்றும், ஆர்வமும், விருப்பும் கொண்ட பிள்ளைகளை உருவாக்க இத்தகைய முயற்சிகள் மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில் கிறீன்ஸ்ரெட் மாலதி கலைக்கூட பொங்கல் நிகழ்வை காணொளியாக தயாரித்துள்ளார் செல்வி ஜெனி ஜெயக்குமார்.
காணொளி தயாரிப்பில் ஆற்றல் மிக்க இளம் பெண்ணாக இவர் வளர்ந்து வருகிறார். அவருடைய தயாரிப்பு எண்ணத்திற்கு களமாகியிருக்கிறது பொங்கல். ஆனால் முழு பலாப்பழம் வெட்டி பொங்கல் வைப்பது ஊரில் கூட அதிகமாக இல்லை. டென்மார்க்கில் நடந்துள்ளது சிறப்பு தருகிறது, காணணொளியை பாருங்கள்.
இனி பட்டிமன்றம், கவியரங்கம், ஜல்லிக்கட்டு என்று வெளிநாடுகளும் தமிழ் கலைகளை வளர்க்கட்டும்.
ஜல்லிக்கட்டு என்றால் டென்மார்க் காளைகள் அசாதாரண வளர்ச்சி கொண்டவை அவற்றை அடக்க முடியுமா..? போலீஸ் அனுமதி கிடைக்குமா..? நமது இளைஞர்கள் கைகளின் மசில்களில் ஓயில் அடிக்காமல் கைகளை பெருப்பித்து ஒரு காளையை அடக்கி டேனிஸ் மக்களுக்கு ஜல்லிக்கட்டு பெருமையை காட்டும் நாள் வருமா..?
எதுவும் வரலாம்.. காலம் அப்படியிருக்கிறது.. அடடா.. அதற்குள் கற்பனையில் காளையை அடக்க போய்விட்டீர்களே…
ஹ… ஹ… ஹ… இந்த காளையின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டதோ..?
அலைகள் 23.01.2019 புதன்