ஆர்ஜண்டீனா நாட்டின் பிரபல பிறிமியர் லீக் உதைபந்தாட்ட வீரர் எமிலியானோ சாலாஸ் சென்ற சிறிய இரக விமானம் கடலில் விழுந்துவிட்டதாக தேடப்படுகிறது.
ஆர்ஜண்டீனாவில் மலர் வைத்து மெழுகுவர்த்திகள் வைக்க ஆரம்பம்..!
என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று தந்தை கலக்கம்.!
கடந்த சனிக்கிழமைதான் இவருடைய சிறந்த விளையாட்டு ஆளுமை காரணமாக பிரபல ; அணி ஒன்றினால் 127 மில்லியன் குறோணர்களுக்கு மூன்றாண்டு காலம் உதைபந்தாட்டத்தில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
அதற்குள் விதி விளையாடிவிட்டது.
பிரான்சில் உள்ள நன்ராஸ் நகரில் இருந்து இங்கிலாந்து வேல்ஸ்சில் உள்ள கார்டிக் நகருக்கு சிறிய இரக விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஆங்கிலக்கால்வாயில் தெரியும் சிறிய தீவான குறியான்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவு தாண்ட விமானம் ராடர் திரையில் இருந்து காணாமல் போனது.
மரணத்தின் விளிம்பில் இருந்து சாலாஸ் குறுந்தகவல் ஒன்றை தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் விமானத்தில் என்னவோ நடந்தவிட்டது, அது கீழே விழப்போகிறது. மேலும் ஒன்றரை மணி நேரத்தில் நான் மறுபடியும் போன் செய்யாவிட்டால் கதை முடிந்துவிட்டது என்று பொருள். மற்றவர்களுக்கு தகவல் வழங்குங்கள் என்று தனது நண்பரான பாரவண்டி சாரதி ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
அவர் கொடுத்த ஒன்றரை மணி நேரம் முடிந்து பல ஒன்றரை மணி நேரங்கள் பறந்துவிட்டன.
ஆர்ஜண்டீனா 28 வயதான இந்த இளம் வீரரை இழந்து அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது..
அதுதான் அவருடைய கடைசி செய்தி..
அலைகள் 23.01.2019 புதன்