1879-ம் ஆண்டு முதல் 1970 வரை வாழ்ந்த இ. எம். ஃபார்ஸ்டர் ஆங்கில நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர் ஆவார். மேலும், இவர் இலக்கிய மற்றும் சமூக விமர்சகராகவும் விளங்கியுள்ளார். இவரது பெரும்பாலான நாவல்கள் வகுப்புவாத வேறுபாடு மற்றும் போலித்தனம் பற்றி எழுதப்பட்டவை. பதினாறு வெவ்வேறு ஆண்டுகளில் இவரது பெயர் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது. இவரது எழுத்துகளை தழுவி பல்வேறு திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. தனது மிகச்சிறந்த படைப்புகளின் மூலமாக அவரது காலத்தின் மிக அற்புதமான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.
# நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கு, நாம் திட்டமிட்டுள்ள வாழ்க்கையை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.
# பிறப்பு, உணவு, தூக்கம், அன்பு மற்றும் இறப்பு ஆகிய ஐந்துமே மனித வாழ்வின் முக்கிய உண்மைகளாகும்.
# உண்மையில் நாம் தனிப்பட்ட முறையில் தெரிந்தவற்றை மட்டுமே நேசிக்க முடியும்.
# ஒரு வரலாற்றாசிரியர் பதிவு செய்கிறார், ஆனால் ஒரு நாவலாசிரியர் உருவாக்குகிறார்.
# எது முக்கியம் என்பதை, நீங்கள் எது சுவாரஸ்யம் என்பதோடு சேர்த்து குழப்பிக் கொள்கிறீர்கள்.
# சிறந்த இலக்கியம் பற்றிய ஆச்சரியம் என்னவென்றால், அதனை வாசிக்கும் மனிதனை அதை எழுதியவரின் நிலையை நோக்கி மாற்றியமைக்கிறது.
# பெரும்பாலான சச்சரவுகள் அந்த நேரத்தில் தவிர்க்க முடியாதவையாகவும், பிறகு நம்பமுடியாதவையாகவும் உள்ளன.
# பல்வேறு நாடுகளின் தாய்மார்கள் சந்திக்க நேர்ந்தால், இனி போர்களே இருக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
# எங்கு அன்பு தேவையில்லையோ அங்கேயே எப்போதும் அது கொடுக்கப் படுகிறது.
# சந்தேகத்திற் கிடமாக இருப்பதைக் காட்டிலும் முட்டாள்தனமாக இருப்பதே சிறந்தது.
# முட்டாள்தனம் மற்றும் அழகு ஆகியன நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளன.
# நாம் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
# எவராலும் இடங்களை கண்டறிய முடியும், ஆனால் மக்களை கண்டுப்பிடிப்பது என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு.