இன்று டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் யூஸ்க் வங்கிக்கு சொந்தமான பொக்ஸ்சன் விளையாட்டரங்கில் மாலை 17.30 மணிக்கு உலக கிண்ண இறுதியாட்டம் நடைபெற்றது. கொன்ட் போல்ட் என்று டேனிஸ் மொழியில் அழைக்கப்படும் கைகளால் பந்தை எறியும் உதைபந்தாட்டம் போன்ற ஆட்டம்.
ஆண்களுக்காக நடைபெற்ற உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் எதிர்த்து மோதிய நோர்வேயை டென்மார்க் 31 – 22 என்ற கோல்கணக்கில் அபார வெற்றியீட்டி தங்கக் கோப்பையை சுவீகரித்தது.
மூன்று தடவைகள் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் தோல்வியடைந்த டென்மார்க் இப்போதுதான் முதற்தடவையாக வெற்றி வாகை சூடியுள்ளது.
சிறந்த விளையாட்டு வீரராக டென்மார்க்கின் மிக்கேல் கன்சன் தேர்வானார். இதைத் தொடர்ந்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் கேர்னிங் நகரில் உள்ள கொங்கிரஸ் சென்டருக்கு அழைத்து வரப்பட்டனர். அத்தருணம் மக்கள் அலையலையாக திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். எமது ரியூப்தமிழ் எப்.எம். நிருபர் அந்த வரவேற்பு கொண்டாட்டத்தை படம் பிடித்தார். அந்தக் காணொளியே இங்கே தரப்படுகிறது.