தமிழ் மொழியை பாடசாலைகளில் சென்று கற்பிக்க புறப்பட்டால் ஓர் ஆசிரியரால் மிகவும் சிறிய தொகை மாணவருக்கே கற்பிக்க முடியும்.. இன்றைய பரபரப்பு வாழ்வுக்கு அது உகந்ததல்ல..
ஆனால் தமது பிள்ளைகளுக்கு சரியான தமிழ் கல்வியை கற்பிக்க இயலாத தமிழ் பெற்றோர் உலகம் முழுவதும் பரவியுள்ளார்கள். அங்கெல்லாம் நாம் சென்று தமிழ் கற்பிக்கத்தான் முடியுமா..?
மேலும் பிள்ளைகளுக்கு பெற்றோர் செவி வழி கதை சொல்ல வசதியாகவும், இன்றைய மேலை நாட்டு வாழ்க்கைக்கு ஏற்பவும் நாம் தமிழ் சிந்தனைகளை யுனிக்காக, எங்கும் இல்லாத வகையில் புதுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படியான புதுமைத் தமிழை பிள்ளைகள் அறிவதைவிட பெற்றோர் அறிவதே முக்கியம்.
வாரத்தில் ஒரு நாள் தமிழ் பள்ளிக்கூடம் என்று பிள்ளைகளை அனுப்பி, தமிழ் கற்பிப்பது போதியதல்ல.. எனவே பெற்றோர் ஒவ்வொருவரும் களமிறங்க வேண்டும். அப்படி களம் இறங்கும்போது கொஞ்சம் புதுமையாக இறங்க வேண்டும். அதற்கு இன்றைய நவீன சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
அதற்கான ஒரு புதுமை முயற்சியே இது..
இனி வாரம் தோறும் அலைகளில் வரும் தவறாது கேளுங்கள்.. பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்..
அலைகள் 09.02.2019