நேற்று கிளிநொச்சியில் முக்கியமான பாடசாலைகளில் உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ரியூப் தமிழ் புத்தக சந்தை சார்பில் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த நூல் இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்போது ரியூப்தமிழ் இளைஞர்கள் இளம் தமிழன் ராம்கி தலைமையில் கிளிநொச்சி வரை எட்டித் தொட்டுள்ளனர். நீர்கொழும்பில் ஆரம்பித்து பொத்துவில்வரை செல்லும் நெடிய யாத்திரை இது.
இந்த நூல் மாணவரிடையே இன்று பெரிய மதிப்பு பெற்றுள்ளது. பாடசாலை பாடங்களை படித்து சோர்வடைந்தால் உடனடியாக இந்த தன்னம்பிக்கை நூலை கையில் எடுத்து வாசித்து புத்தெழுச்சி பெறுவதாக மாணவி ஒருவர் கூறுகிறார்.
தமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை தருவதாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொடர்கிறது நமது பணி என்கிறார்கள் தாயக இளையோர்.
அலைகள் 12.02.2019