இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியை பொறுத்தவரையில் சகல மதங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகள் வார இறுதி நாட்களில் அவ்வப்பகுதி மத வழிபாட்டு த்தலங்களிலும் பொது இடங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு வழிபாட்டுத்தலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத போதனைகளை பெற்று வருகின்றனர். எனினும் போதைவஸ்து விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமாக இம்மாணவர்கள் இவற்றுக்கு வருகை தரும் போதும் வெளியேறிச் செல்லும் போதும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயமாக இம் மாணவர்களின் பெற்றோர் கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு பிரதேச சர்வ மத அமைப்புகள் உட்பட சமூக நல அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கின்றன.