எங்கள் குழுச் சாரண ஆசிரியர் திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுக்கு இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…!
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முனனாள் குழுச் சாரண ஆசிரியராகவும்,புகழ் பூத்த பிரபல விலங்கியல் ஆசிரியராகவும் சிறப்புடன் சேவையாற்றிப் பின்னர் யுத்தகாலத்தில் நெருக்கடி மிகுந்த காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின். அதிபராகவும் , பருத்தித் துறை மாவட்டத்தின் முன்னாள் சாரண ஆணையாளராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசான் திரு.கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் இன்று வெள்ளிகிழமை அதிகாலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்துள்ளார்.
16.02.1934 இல் காலம் சென்ற டாக்ரர் கோணநாயகம் அவர்களுக்கும், சந்திரகாந்தி அவர்களுக்கும் மூத்த மகனாக பிறந்த திரு.கோ.செல்வவிநாயகம் அவர்கள் 15.02.2019 இல் இறைவனடி சேர்ந்துள்ளார். விஞ்ஞானமானி சிறப்புப் பட்டதாரியான இவர் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் சிறந்த தேர்ச்சியையும் பெற்று உடுபபிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் கணினிக கல்வி ஆலோசகராகச் சிறப்புடன் பணியாற்றியிருந்தார்.
கல்வி நிர்வாக சேவை அலுவலராகப் பதவி உயர்வு பெற்று கல்வித் திணைக்களத்தில் பணிப்பாளராகக் கடமை ஏற்குமாறு அழைக்கப்பட்ட போதும் பாடசாலை யினூடாக மாணவர்களிடையே ஆற்றல்களை வளர்த்து, இந்த நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கில் அதனை ஏற்கமறுத்து, கல்லூரி அதிபராகவே இருந்து ஓய்வு பெறும்வரை அயராது உழைத்தவர்.
அன்னாரது புகழுடல் வல்வெட்டித்துறை ஊரிக்காட் டில் அமைந்துள்ள அவரது “சாந்தம்” இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர் வரும் சனிக் கிழமை (16.02.2019) அன்று முற்பகல் 9.00 மணிக்கு மயிலியதனை இந்து மயானத் திற்குத் தகனக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப் படும் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அவரது மாணவர் களுக் கும்,அவரால் உயர் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட சாரணர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் அறியத் தருமாறு அவரது மருமகன் திரு.ந.ஜெயவீரசிகாமணி (Marine Engineer) அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்கள் விலங்கியல் பாட ஆசிரியராகவும்,குழுச் சாரண ஆசிரியராகவும், சாரண பயிற்றுநராகவும், பருத்தித்துறை மாவட்ட சாரண ஆணையாளராக வும் ஆளுமை படைத்த கல்வி நிர்வாக சேவை அதிகாரியாகவும்,வடமராட்சி வடக்குப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் இருந்து எங்களை சிறந்த நிர்வாகியாகவும், பல்துறை ஆற்றல்கள் மிக்கவர்களாகவும் வாழ வழிகாட்டிய துடன,ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதி யாகிய மாவீரன் ரவீந்திரன் அவர்களை இந்த மண்ணுக்கு அளித்து,இன்று மீளாத்துயில் கொண்டிருக்கும் எங்கள் ஆசான் அமரர் கோ.செல்வவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின் றோம்…..!
வல்வை ந.அனந்தராஜ் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.