புதிய அரசியலமைப்பு மூலம் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை கடன் சுமைகளில் இருந்து விடுவிப்பதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
நேற்று நடைபற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் முன்னாள் ஆட்சியாளர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே நகல் அரசியலமைப்பு முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு தீர்வுகள் முன்மொழியப்பட்டன. அவர்கள் முன்மொழிந்து அவர்களே விமர்சிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வுக்கு வழி வகுத்து ஜனநாயகத்தை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூண்டுள்ளதாக சுட்டிக்காடடிய பிரதமர் ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் திடசங்கற்ப்பம் பூண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் பெண்கள் பெற்றிருந்த 140 கோடி நுண் கடன்களையும், அதற்குரிய வட்டித் தொகையையும் இரத்துச் செய்வது தொடர்பான ஆவணங்கள் நேற்று கையளிகக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 300ற்கு மேற்பட்ட பெண்கள் பெற்ற கடன்கள் இரத்துச் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றினார். அதிக வட்டியை அறவிடும் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்குப் பதிலாக, அரசின் மூலம் முழுமையாக அல்லது பகுதியளவில் வட்டி செலுத்தப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்துடன் இணையுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு புதிய சட்ட திட்டங்கள் அவசியம். இதற்கான நகல் சட்டமூலம் வரையப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.