நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21ம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவைிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
அதன்படி பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது.
நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி. டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார்.