01. வெற்றி என்பது மூளையின் அளவை கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல சிந்தனையின் அளவைப் பொறுத்தே தீர்மானமாகிறது.
02. பிரமாண்டமாக சிந்தியுங்கள் அதை வைத்தே உங்கள் வங்கிக் கணக்கும், மகிழ்ச்சியும் தீர்மானிக்கப்படுகிறது.
03. நாம் எல்லோருமே நம்மை சுற்றியிருக்கிற சிந்தனையின் விளைவுகளே. நம்மை சுற்றியுள்ள சிந்தனைகள் மிகவும் சிறிதாக இருப்பதாலேயே நம்மால் முன்னேற முடியாதிருக்கிறது என்பதை உணருங்கள்.
04. மனிதர்களின் மனதில் ஊட்டப்பட்ட சிறுபராய அச்சமே பாதுகாப்பெனக் கருதி, குறுகிய சிந்தனைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. உங்களை முன்னேற விடாமல் முடக்கி வைத்திருப்பதும் அதுதான். ( மாமனை மணமுடித்தால் பாதுகாப்பு என்று எண்ணும் அறியாமை )
05. நம்மிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குறுகிய சிந்தனைகளுக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இதனால் நேர்மையாக வழிகாட்ட எவருமின்றி முன்னேற்றம் நூற்றாண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. ஆகவே நீங்களே தலைமைதாங்க தயாராகுங்கள்.
06. வெற்றிக்கு நீங்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்று கூறுவதைப் போல ஏமாற்று வித்தை உலகில் எதுவும் கிடையாது. வெற்றிக்கு எந்த விலையும் வேண்டியதில்லை. நீங்கள் முன்னெடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் ஒரு பதிலீட்டை வழங்குகிறது என்பதுதான் உண்மை. அது இழப்பை தராது.
07. பெரிய வேலைகளுக்கு விண்ணப்பிப்போர் பத்துப்பேர் என்றால் சிறிய வேலைகளுக்கு பல்லாயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வருகின்றனவே ஏன்..? காரணம் இதுதான் பெரிதாக சிந்திக்க மனிதர் பயப்படுகிறார்கள்.
08. எண்ணங்கள்தான் உலகை ஆளுகின்றன என்பதை கண்கூடாக கண்டிருப்போரே மாபெரும் மனிதர்கள். ஆகவே எண்ணங்களை பெரிதாக வளருங்கள். சுற்றியிருக்கும் படிப்பறியாத பாமர மக்கள் நூறு பேருக்காக வாழ்ந்து சாகவா நீங்கள் பிறந்தீர்கள்..?
09. சொர்க்கத்தை நரகமாக்கவும் அதுபோல நரகத்தை சொர்க்கமாக்கவும் மாற்றுவது நமது மனதுதான். செத்தவன் வருவானென்றும் இருப்பவனை செத்துவிட்டவன் போல கண்டு கொள்ளாமல் வாழவும் காரணம் மனம்தான்.
10. நல்லவை என்றும் மோசமானவை என்றும் எதுவும் இல்லை. நமது சிந்தனைதான் ஒன்றை நல்லதாகவும் இன்னொன்றை மோசமானதாகவும் ஆக்குகிறது என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறுகிறார்.
11. மேலே சொல்லப்பட்ட பத்து விடயங்களுக்கும் என்ன ஆதாரம்..? வெற்றிகரமான மக்களே இதற்கெல்லாம் ஆதாரம். வெற்றி, சாதனை, மகிழ்ச்சி ஆகியவையே உண்மையான சாதனைகளை நிகழ்த்துகின்றன.
12 மாபெரும் வெற்றிகளை பெறுவதற்கு இரண்டு விடயங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று ஆழ்மன விருப்பம் இரண்டு அந்த ஆழ்மன விருப்பத்தை தேர்ந்தெடுப்பதற்கான கருவி ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க வல்ல அறிவு அடுத்து வேண்டும்.
13. பிரமாண்டமாக சிந்தியுங்கள் அப்போது நீங்கள் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பெரும் மகிழ்ச்சியில் திழைப்பீர்கள். பெரிய அளவில் சாதிப்பீர்கள். பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். ஏராளமான நண்பர்களையும், மதிப்பையும், மரியாதையையும் பெறுவீர்கள்.
14. வாழ்க்கை என்பது கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடுகிற ஒன்றாக இருப்பதால் சிறிது சிறிதாக சிந்தித்துக்கொண்டிருப்பது வீண் என்று மாபெரும் தத்துவவியலாளரான டிஸ்ரேலி கூகிறார்.
15. பிரமாண்டமாக சிந்திப்பதன் மூலம் பிரமாண்டமான விளைவுகளை பெற முடியும். அதன் மூலம் உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் தொழிற்சாலையாக மாற்றுங்கள்.
16. நம்பிக்கை என்னும் சக்தியை உங்களிடம் வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியை உருவாக்கித்தரவல்ல உறுதியான திட்டத்தை அதன் மூலம் வகுத்துக் கொள்ளுங்கள்.
17. ஆரோக்கியம் தொடர்பாக நீங்கள் வகுத்துக்கொண்ட எதிர்மறை சிந்தனைகளை விரட்டியடித்து மகிழ்வோடு வாழுங்கள்.
18. வெறும் அறிவைவிட உங்கள் சிந்தனை சக்தியே முக்கியமானது என்பதை கண்டு பிடியுங்கள்.
19. வெறுமனே தகவல்களை சேமிக்கும் ஒரு கிடங்குபோல உங்கள் மனங்களை பயன்படுத்தாமல் சிந்திப்பதற்கு அதை பயன்படுத்துங்கள்.
20. அறிவு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க கூறும் சாக்கு போக்குகளை கண்டு பிடியுங்கள். அதை முறியடிக்க மூன்று எளிய வழிகளை கண்டறியுங்கள்.
21. எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு வயது போதாது ஆகிய சாக்கு போக்குக்களில் இருந்து உடனடியாக மீண்டெழுங்கள்.
22. அதிர்ஷ்டம் தொடர்பான சாக்கு போக்குகளை விடுத்து, நல்ல அதிர்ஷ்டத்தை உங்களை நோக்கி கவர்ந்திழுங்கள்.
23. பயத்தை களைந்து நம்பிக்கையை மனதில் உருவாக்கும் வழிகளை கண்டறியுங்கள்.
24. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உங்கள் நினைவுகளை கையாளுங்கள்.
25. உங்கள் மனச்சாட்சிக்கு உட்பட்டு நடப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்.
உங்களுக்காக பழமொழிகள் தொடர்ந்தும் வரும்
மற்றவர்களும் இதைப்படித்து பயன்பெற வழி செய்தால் நீங்கள் மேலும் உயர்வு பெறுவீர்கள். நமது நோக்கம் இந்த வையகத்தில் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.
அலைகள் 16.02.2019