உங்கள் தவறுகளை அங்கீகரியுங்கள். (புரிஞ்சுகொள்ள முடியாத உண்மை)
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். நீதிமொழி 9:9. ( வச. 1-10)
சில வருடங்களுக்குமுன் புற்றுநோய் ஆராட்சியாளர் டாக்டர். ராபர்ட் குட் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்றை பத்திரிகையில் வாசித்தேன். அவருடைய சிறந்த குணாதிச யங்களைக் குறித்து மிகவும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. அவர் புதிய கருத்துக் களையுடையவர் என்றும், தனக்கு அளிக்கப்படும் எந்தச் செய்திகளையும் பயன் படுத்தும்; திறமை படைத்தவர் என்றும் அந்த கட்டுரை விபரித்தது. என்றாலும் அவரைக் குறித்து அளிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட செய்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அவரின் ஆய்வுரைகளில் ஒருதவறு கண்டுபிடிக்கப்படும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு, அதை உடனடியாக சரிசெய்வதாக அக்கட்டுரையில் எழுதப்பட் டிருந்தது. மேலும் அவருடன் வேலைசெய்த ஒரு டாக்டர் இவ்வாறு கூறியதாக எழுதியிருந்தது. டாக்டர். ராபர்ட் குட் தன்னுடைய கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்று ஒருபோதும் கூறுவதில்லை. எனவே அவற்றில் ஒன்று தவறு என்று நிருபிக்கப் படும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கிற்கு நீதிமொழிகள் 9ம் அதிகாரம் அதிக மதிப்பை அளிக்கிறது. தன்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் மனிதனை அது ஞானமுள்ளவன், அல்லது ஞானி என்று அழைக்கிறது. தன்னுடைய தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது அவன் கோபமடைவதில்லை. மாறாக, தன்னுடைய தவறுகளை சரிப்படுத்திக் கொண்டு மேலும் தேர்ச்சியடைகிறான். இதனையே நாம் மேலே வாசித்தோம்.
ஆனால் பரிசாயக்காரன், அதாவது தனது தவறை உணரமனமற்றவன் கண்டிக்கப் படும்போது அவன் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறான். இதனை வச.8 தெளிவாக்குகிறது. பரியாசக்காரனை கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான் என்று. அவன் தன்னுடைய தற்பெருமையின் காரணமாக அதற்கு செவி கொடுக்க மறுக்கிறான்.
மற்றவர்கள் நம்முடைய தவறுகளை நமக்கு எடுத்துரைக்கும்போது நாம் அவற்றிற்கு செவிகொடுப்பதன்மூலம் ஞானத்தின் பாதையைப் பின்பற்றவேண்டும். நாம் உண்மையாகவே ஞானமுள்ளவர்களாக மாறவேண்டுமென்றால் நாமும் சில நேரங்களில் முட்டாளாகச் செயற்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதோ, உன்கண்ணில் உத்திரம் இருக்கையில், உன்சகோதரனை நோக்கி, நான் உன்கண்ணில் இருக்கிற துரம்பை எடுத்துப்போடட்டும் என்று சொல்வது எப்படீ? மாயக்காரனே, முன்பு உன்கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன்சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய், மத்.7:4.
இயேசுவோ இந்த உண்மையை பாமரமக்களுக்கு வலியுறுத்த ஒரு நகைச் சுவையை சத்தியத்தில் பயன்படுத்தினார். அதாவது, தன்னுடைய கண்ணில் பெரிய உத்திரம் இருக்கும்போது, தன்சகோதரனுடைய கண்ணில் இருக்கும் சிறிய துரும்பை அகற்ற முன்வரும் ஒருவனைப்போல இன்று சமயத்தலைவர்களும், அரசியல் வாதிகளும், உயர்மட்ட அல்லது உயர்ந்த எண்ணம்கொண்ட மக்களும் இருக் கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
நாம் நமது சொந்த தவறுகளைக் காண்பதில்லை. ஆனால் மற்றவர்களிலுள்ள சிறிய குறைபாடுகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் இரண்டு அளவுகோல்களை, அதாவது, ஒன்று நமக்காக, மற்றொன்று பிறருக்காக வைத்திருக்கிறோம். அதேபோல நமது செயற்பாடுகளை விபரிக்க இரண்டு வௌ;வேறுபட்ட சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். மற்றவர்களிடம் – மோசமான கோபமாக – காணப்படுவது நம்மில் ”நீதியானசீற்றம்” என்றாகி விடுகிறது. மற்றவர்களிடம் காணப்படுவது ”கஞ்சத்தனம்” நம்மிலே அது ”சிக்கனம்”. இதுதான் அந்த அளவுகோலும், உண்மையும்கூட. அதுமட்டுமல்லாமல் நமது சொந்தத் தவறுகளுக்காக மற்றவர்களையும் குற்றப் படுத்தவும் நாம் முயல்கிறோம்.
இது ஓர் கற்பனைக்கதை. ஆனால் சராசரிக் குடும்பத்தில் நடைபெறும் ஓர் உரையாடல். 20 ஆண்டுகாலமாக திருமண உறவைக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென மனைவி ” நீங்கள் துவக்கத்தில் இருந்ததுபோல அன்பாகவும் நேசத்துடனும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. அப்போது காரில் செல்லும்போது நாம் நெருக்கமாக அமர்ந்திருப்போம். இப்பொழுதெல்லாம் நீங்கள் என்னை விட்டு அதிக தூரம் விலகியிருக்கிறீர்கள்” என கூறினாள். அதற்கு கணவன், ”என் அன்பே, நான் காரோட்டும் போது எந்த இடத்தில் அமர்ந்திருப்பேனோ அதே இடத்தில்தான் இப்பொதும் இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
குறைகூறும் மனோபாவத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருப்போமாக. அது நாம் நமது சொந்தத் தவறுகளைக் காணமுடியாமல் செய்வதோடுகூட, அதை நம்மீதே திருப்பும் அபாயமும் உண்டு.
ஒருசில நிமிடங்கள் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, எம்முடைய வாழ்வை சீராக்குவோம். நல்ல மனதோடு வாஞ்ச்சித்த மக்களுக்கு தேவன் அருள் புரிவாராக.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர் வதிப்பாராக!
————————
உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 06
தேடைய நிறைவும் மனித குறைவும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 1கொரிந்தியர் 13:10.
இன்று நீங்களும் நானும் சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாண்மையானவாகள் கூறுவது தங்களின் குறைவைப்பற்றி. மிகச்சொற்ப மனிதர்கள் மட்டும் தங்களின் நிறைவைக் கூறுவர். அதனால் குறைவேயில்லாத மனிதன் ஒருவரும் இல்லை முடிவுக்கு உலகம் வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஏதாவது ஒரு குறைவு ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. ஏழைக்கு ஆகாரம் குறைவு. செல்வந்தனுக்கு சமாதானம் குறைவு. வசதி உள்ளவனுக்கு நிம்மதி குறைவு. பெருந்தீனிக்காரனுக்கு உடல் நலக்குறைவு. எங்கு திரும்பினாலும் குறைவு, குறைவு.
ஒவ்வொரு மனிதர்களும் தனக்கிருக்கும் குறைவுகளினால் வேதனையுற்று, உள்ளத்தால் தேறுதலற்று இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் வேதம் மேலே நாம் வாசித்த வசனத்தின் ஊடாக மிகப்பெரிய உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று.
குறைவினால் வாடும் மக்களுக்கு உலகமும் ஞானிகளும் கொடுக்கும் ஆறுதல் அல்லது, ஆலோசனை இரண்டு வகையானது. 1. உங்களை விடக் குறைவுகள் அதிகம் உள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும். 2. குறைவுகளை பொருட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு இதுதான் வாழ்க்கை முறை என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.
ஆனால் வேதம் சொல்கிறது, தத்துவ ஞானிகளின் ஆலோசனைகளையும், அறிவாளிகளின் அறிவுரைகளையும் ஒதுக்கிவிட்டு கிறிஸ்த்து இயேசுவை நோக்கிப் பாருங்கள் என்று. அவர் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குகிறவர். மனதுருகி அற்புதம் செய்து ஆறுதற்படுத்துபவர். துக்கத்தை சந்தோசமாக மாற்றுகிறவர். கண்ணீரை ஆனந்தக் களிப்பாய் மாற்றுகிறவர். தோல்வியை நிறைவாய் மாற்றுகிறவர். கசந்து போயுள்ள வாழ்க்கையை இன்பமான மதுரமான வாழ்க்கையாக மாற்றுபவர்.குறைவுகளை நிறைவாக்கும் தேவனிடம் வரும்போது இரண்டு காரியங்கள் உங்களின் வாழ்க்கையில் நடைபெறுகிறது.
முதலாவது, உலகப்பிரகாரமான அல்லது சரீரப்பிரகாரமான தேவைகள் சந்திக்கப் படுகிறது. அதாவது நோய்கள் குணமாதல், கஸ்டங்கள் வேதனையில் இருந்து ஆறுதல். பிசாசின் பிடியில் இருந்து விடுதலை, பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை, வேதனையுடன்கூடிய குடும்பவாழ்க்கையில் ஆறுதல், தோல்விகளில் இருந்து வெற்றிவாழ்க்கை இப்படியாக பலவற்றை எடுத்துக் கூறலாம். இவற்றை நாம் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் காணலாம்.
புதியஏற்பாட்டில் முதல் நான்கு சுவிசேஷசங்களை வாசித்துப்பார்த்தால் இயேசுவிடம் வந்தவர்கள் அடைந்துகொண்ட அற்புதங்களை, ஆறுதலை, நோயில் இருந்து விடுதலையை, சிறுமைப்பாட்டில் இருந்து விடுதலையை அடைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். இத்தனை ஆயிரக்கணக்கான நன்மைகளை மக்கள் அடைந்ததற்கு காரணம் தேவனைத் தேடிப்போய் தங்களை ஆறுதல் படுத்தும்படி அவரிடம் வேண்டிக் கொண்டதுதான். வேண்டிக் கொண்டவர்கள் அத்தனை பேரும் இயேசுவிடம் இருந்து ஆறுதலை, நன்மையை கண்டடைந்தர்கள்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் அன்பான அலைகள் வாசகநேயர்களே, நீங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுவே எனக்கு இரங்கி எனது வேதனை களில் இருந்து நான் ஆறுதலைக் கணடுகொள்ள எனக்கு இரங்கும் என்று தேவனிடம் மன்றாடுங்கள். அவர் உங்களது கதறலைக்கேட்டு ஆறுதலைக் கட்டளையிடுவார்.
இரண்டாவது, தேவகிருபையால் கிடைக்கும் தேவபராமரிப்பு, உள்ளான மனிதனில் செழிமை, தேவனுடனான உறவு. இதை நாம் முழுமையாக விளங்கிக்கொள்ள சங்கீதம் 91ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்க வேண்டும்.
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி, நீர் என்அடைக்கலம், என்கோட்டை, என்தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன்பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
உன்கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன்வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய து}தர்களுக்குக் கட்டளையிடுவார். உன்பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள்கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக் கிறபடியால் அவனை விடுவிப்பேன். என்நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னைநோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
பிரியமான மக்களே, கிறிஸ்த்தவ வாழ்கை என்பது, தேவனுடன் வாழும் ஓர் வாழ்க்கை. இயேசுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவுமுறை. அதன் நிமித்தமாக அப்பா, பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தைப் பெற்றுள்ளோம். (தகப்பன் – பிள்ளைகள் போன்ற உறவு முறை) இந்த உறவு முறைதான் எங்களை பாவத்தில்இருந்து விடுதலையை பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த உறவு முறை தான் தேவனிடத்தில் இருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த உறவுமுறைதான் தேவபராமரிப்பை அடைந்துகொள்ள உதவு கிறது. இந்த உறவுமுறையை வாழ்க்கையில் கண்டுகொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.
அன்பின் பரலோக பிதாவே, உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. இன்று உம்முடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் மனுக்குலம் அடையும் நன்மைகளை அறிந்துகொள்ள உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. எனது குறைகளை நீக்கி என்னை விடுதபை;படுத்தி, ஆறுதலை எனது வாழ்வில் கண்டுகொள்ள உதவி செய்யும் அப்பா. உம்முடன் ஏற்படும் உறவின் மூலம் தேவபராமரிப்புடன் வாழ உதவி செய்து என்னைக்காத்துக் கொள்ளும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.