யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும் தன்மையுடைய செயற்கைக் கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சகோதரத்துவத்தின் காலடிகள் நிதியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நேற்றுக் (22) காலை 11.30மணியளவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான நெகிழும் தன்மையுடைய செயற்கைக் கால்களை வழங்கி வைத்தார்.
சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியில் உருவாக்கப்பட்ட இந்த கால்கள் கிருபா லேணர்ஸ் மற்றும் சகோதரத்துவத்தின் காலடிகள் நிதியம், சரஸ்வதி மண்டபம், நன்கொடையாளர் செ.ஸ்ரீஸ்கந்தவேல் ஆகியோரின் அனுசரணையில், இந்த செயற்கைக் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், அனுசரணையாளர்கள் சிறந்த சமூக சேவையாளர்களாக நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவுச் சின்னத்தை வடமாகாண ஆளுநர் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.