சிறந்த நடிகர் , சிறந்த ஒலித்தொகுப்பு , சிறந்த ஒலிக்கலவை , சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 ஆஸ்கார் விருதுகளை Bohemian Rhapsody திரைப்படம் வென்றுள்ளது. மேலும் சிறந்த படம் , சிறந்த திரைக்கதை மற்றும் துணை நடிகருக்கான விருதினை GREEN BOOK திரைப்படம் வென்றுள்ளது. இதேபோல் ரோமா திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை தட்டிச்சென்றது. வசூலில் சாதனை படைத்த பிளாக் பாந்தர் படத்துக்கு இதுவரை 3 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த பின்னணி இசை- இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சனுக்கு பிளாக் பாந்தர் படத்துக்காக வழங்கப்பட்டது சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என ஏற்கெனவே இரு விருதுகளை பிளாக் பாந்தர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது . ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் திடீரென விலகியதால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது. 91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் ரோமா படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்திய பெண் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
இந்திய பெண் குறித்த ‘PERIOD END OF SENTENCE’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை தயாரித்ததை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் எடுக்கப்பட்டது.
விருது வென்றோர் விவரம்
*சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் (IfBealeStreetCouldTalk)
*சிறந்த ஆவணப்படம்: ஃப்ரீ சோலோ(FREESOLO).
*சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: வைஸ் (vice).
*சிறந்த ஆடை வடிவமைப்பு : பிளாக் பேந்தர்
*சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : ரூத் கார்டர் (பிளாக்பேந்தர்)
*சிறந்த ஒளிப்பதிவு: ரோமோ படத்துக்காக அல்போன்சா குரோன்
* சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ நாட்டு திரைப்படம்)
* சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு: போகிமியான் ராப்சோடி
*சிறந்த ஆவணப்படம்: கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘PERIOD END OF SENTENCE’
*சிறந்த அனிமேஷன் திரைப்படம்: (Spider-Man: Into the Spider-Verse)
*சிறந்த பின்னணி இசை: லுட்விக் கோரன்சன் (பிளாக் பாந்தர்)
*சிறந்த திரைக்கதை ‘கிரீன் புக்’
*சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் ‘SKIN’
* சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் #FIRSTMAN
* சிறந்த அனிமேஷன் குறும்படம் BAO
* சிறந்த துணை நடிகர் மஹெர்ஷாலா அலி (கிரீன் புக்)
* சிறந்த ஒலி கலவை ‘போகிமியான் ரஃப்சோடி’
* சிறந்த ஒலி தொகுப்பு ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (BohemianRhapsody)
* சிறந்த ஒளிப்பதிவு அல்ஃபோன்சோ குவாரான் (Roma)
* சிறந்த நடிகர் ரமி மாலெக் (BohemianRhapsody)
* சிறந்த இயக்குனர் அல்போன்சோ குவாரன் (ROMA)
* சிறந்த நடிகை ஒலிவியா கால்மன் (THE FAVOURITE)
* சிறந்த படம் கிரீன் புக்(GREEN BOOK)