இந்தியாவின் விமானங்கள் நேற்று பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் காஸ்மீர் பகுதியில் குண்டு வீசி சுமார் 300 பேர்வரை தீவிரவாதிகளை பழி வாங்கியதாக அறிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த பாகிஸ்தானிய பிரதமரும் பிரபல முன்னாள் கிரிக்ட் வீரருமான இம்ரான்கான் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் நுழைந்தாகக் கூறி இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் என்று பாகிஸ்தானை மேற்கோள் காட்டி டென்மார்க் தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் வெளியான செய்திகள் விபத்தில் விமானங்கள் விழுந்து சிதறி இரண்டு விமானிகள் பலி என்றும்
இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தா போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்த்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய படைகள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
அநீதியான முறையில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா கூறியிருந்தது.
இந்த நிலையில் வேறு வழியற்ற நிலையில் இந்திய விமானங்கள் பயங்கரவாதிகள் இலக்குகளுக்குள் நுழைந்து தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு நாட்டின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது ஆகவே சர்வதேச நீதிமன்று போக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.
சீன அதிபர் ஜி ஜின் பின் இருவரும் அடக்கி வாசியுங்கள் பிராந்தியத்தை பதட்டமாக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
நேற்று சீனாவில் நடந்த மாநாட்டில் பேசிய இந்திய மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்து, தாக்குதலுக்கும் தூண்டுகோல் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இது உள்ளுர் அரசியலை சமாளிக்க இரு நாடுகளும் நடத்தும் சீனா வெடி விளையாட்டா இல்லை உண்மையா என்பது தெரியவில்லை.
ஆனால் இரு நாடுகளும் நிச்சமாக முழுமையான போருக்குள் இன்றுள்ள சூழலில் போகாது என்பது தெரிந்ததே. போனால் தூரத்தே எரியும் நெருப்பு இரு நாடுகளில் குர்தாக்களிலும் பற்றிவிடும் என்பதை இரு நாடுகளும் அறியும்.
அலைகள் 27.02.2019