2019-ம் ஆண்டின் உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூரூன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.
முகேஷ் அம்பானியை தவிர ஹிந்துஜா குழும தலைவர் எஸ்.பி ஹிந்துஜா 21 பில்லினயன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். அஸிம் பிரேம்ஜி 17 பில்லியன்கள் அமெரிக்க டாலருடன் 3வது இடத்தில் உள்ளார்.
பூனாவாலா குழும தலைவர் சைரஸ் பூனாவாலா 13 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதிக சொத்து கொண்ட இந்தியர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் ஆர்சலர் மிட்டல் குழுமத்தின் லட்சுமி மிட்டலும், கோட்டாக் மகேந்திரா நிறுவனத்தின் உதய் கோட்டக் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
9.9 பில்லியன் டாலர்கள் சொத்துடன் 7வது இடத்தில் கவுதம் அதானியும், 9.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 8வது இடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் தலிப் சாங்வியும், டாடா குழுமத்தைச் சேர்ந்த சைஸ் மிஸ்திரி 9வது இடத்திலும், அதே குழுமத்தைச் சேர்ந்த பலனோஜ் மிஸ்திரி 10வது இடத்திலும் உள்ளனர். இவர்களது சொத்து மதிப்பும் தலா 9.5 பில்லியன் டாலர்களாக உள்ளன.