பெண்கள் உரிமை தொடர்பாக முக்கிய கருத்துக்களை வழங்கினார்.
இலங்கையில் பெண்களை நம்பி பொறுப்புக்களை கொடுப்பதற்கு இன்றும் பலர் தயாரில்லை..
ஆனால் ஒரு பெண்ணை நிர்வாக இயக்குநராக கொண்டு வடக்கே இயங்கும் நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது ரியூப் தமிழ் எப்.எம் வானொலி.
தலைமை ஏற்ற பின்னர் பெண்களால் முடியும் என்பதை வடக்கு மரபுவாதிகளுக்கு எடுத்துரைத்து வருகிறார் இப்பெண்மணி. சமீபத்தில் வானொலியில் இவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்று புலம் பெயர் நாடொன்றில் நடைபெறும் மத வியாபாரத்தை முகமூடி கிழித்திருந்தது.
தாயாக, மனைவியாக மட்டும் பாத்திரம் வகிப்பது, சம்பளத்திற்கு எங்கோ வேலை செய்து குடும்பத்தை காத்தால் போதும் என்பதல்ல பெண்கள் பணி.
கலாச்சாரம் என்ற போலி முகமூடியை போட்டபடி பெண்கள் மீது அவதூறு பரப்பி மிரட்டி, அவர்களை தெறிக்க ஓட வைத்து, தானே அனைத்தையும் அனுபவித்து வருகிறது ஒரு கூட்டம்.
அதே வேளை நள்ளிரவு மொட்டாக்குடன் போய் சகல அயோக்கிய தனங்களையும் செய்வான் இந்த சமுதாய புல்லுருவி என்பதை அம்மபலத்திற்கு கொண்டுவராமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.
இலங்கை கூட்டமைப்பு கூட ஒரு பெண்ணை தலைவியாக்காமல் சம்மந்தரை எத்தனை காலம் தலைவராக வைத்திருக்கப்போகிறது..?
ஓய்வூதியம் எடுத்துவிட்டு இங்கு நமக்கு அரசியல்பாடம் நடத்துகிறார்கள் முதியவர்கள்..!
முதுமை சிறந்தது எல்லோரும் போக வேண்டிய வழி அதை உணர்ந்து நடக்கும்போதுதான் அது பெருமைக்குரியதாகிறது. அதை நாம் மதிக்கிறோம் அது வேறு இன்று நடக்கும் முதுமை அரசியல் வேறு..
மனிதனுக்கு முதுமை இயல்பானதுதான், ஆனால் பதவிகளில் புளித்த கீரைகளாகவும், களிம்பேறிய லோட்டாக்களாகவும் இன்னும் எத்தனை காலம் இங்கு அரசியல் வியாபாரம் நடக்கப்போகிறது..?
வழிவிடவோ வழி காட்டவோ இங்கு யாரும் இல்லை.. வந்ததை வாயில் போடும் கூட்டமே எங்கும் புழுத்துக்கிடக்pறது..
இங்கிருக்கும் இளையோர் காயடிக்கப்படுகிறார்கள் கடந்த 70 வருடங்களாக..
இப்படி எண்ணி, எழுதி என்று நாம் கவலைப்பட ஒரு பெண் நம் கருத்துக்களில் சிலதை அங்கு பேசியுள்ளார்.
( இந்த எழுத்து டிவன்யா கருத்தல்ல.. அவர் பேச்சு நம் உள்ளத்தில் ஏற்படுத்திய தெறிப்பு..)
அலைகள் 02.03.2019