ஜே.வி.பி.யின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.