மேலை நாட்டு தன்னம்பிக்கை நூல்களை படித்து அவற்றை உங்களுக்கு சுருக்கித் தருகிறோம். ஏனென்றால் உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி..
01. வெற்றி என்பது உங்கள் சிந்தனையின் அளவால்தான் தீர்மானமாகிறது.
02. எப்போதுமே பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும். பிரமாண்டமான சிந்தனையாளர் பயன்படுத்தும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும்.
03. எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உங்கள் மனதில் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள்.
04. பொருட்களுக்கு மதிப்பை கூட்டுவது போல, உங்கள் பணிகள் குறித்தும் பிரமாண்டமாக சிந்தியுங்கள்.
05. அற்பமான விடயங்களை தாண்டி எது முக்கியம் என்பதை சிந்தித்து அதற்கு முதன்மை கொடுத்து நடக்க வேண்டும்.
06. காரியங்களை செய்து முடிக்க படைப்பாற்றலுடன் கூடிய புதிய வழிகளை கண்டு பிடியுங்கள்.
07. உங்களால் முடியும் என்று நம்புவதன் மூலம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளுதல்.
08. மனதை முடக்கிப் போடும் பாரம்பரிய சிந்தனைகளை எதிர்த்துப் போராடுங்கள்.
09. உங்களுடைய படைப்பாற்றல் சக்தியை பயன்படுத்தி அதிகமான விடயங்களை செய்யுங்கள் அதையும் சிறப்பாக செய்யுங்கள்.
10. உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து வைத்து அவற்றின் மூலமாக உங்கள் படைப்பாற்றலுக்கு வலுவூட்டுங்கள்.
11. உங்கள் சிந்தனையை விரிவுபடுத்தி மனதைத் தூண்டுங்கள்.
12. உங்கள் சிந்தனை பெற்றெடுக்கும் புதிய யோசனைகளை சரிவர பயன்படுத்த பழகுங்கள்.
13. நீங்கள் முக்கியமானவர் என்பது போல நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் உள்ளத்தில் அது ஏற்பட அத்தகைய நடை அவசியம்.
14. எப்போதுமே உங்கள் சிந்தனையை செயற்படுத்தும் சூழல் நல்லவிதமாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள்.
15. சிறிய சிந்தனையை கொண்டவர்கள் உங்களை முன்னேற விடாமல் தடுப்பார்கள் அவர்களைத் தவிர்த்துவிடுங்கள்.
16. உங்கள் சிந்தனையில் நச்சை கலக்கும் விஷயங்களை உங்கள் சூழலில் இருந்து தூக்கி வீசுங்கள்.
17. நீங்கள் செய்கின்ற அனைத்தையுமே தரமாக செய்யுங்கள். உங்கள் வேலைச்சூழலை சிறப்பாக நிர்வகியுங்கள்.
18. நீங்கள் விரும்புவதை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்குரிய மனப்போக்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
19. எப்போதுமே உற்சாகத்துடனும் செயற்துடிப்புடனும் இருங்கள்.
20. உண்மையான உற்சாகத்தின் சக்தியை வளர்த்து நான் முக்கியமானவன் என்ற உணர்வை வளருங்கள்.
21. சேவைக்கு முதலுரிமை என்ற மனப்போக்கை உருவாக்கி அதிக பணத்தை தேடுங்கள்.
22. மற்றவர்கள் குறித்து சரியான சிந்தனையை கொள்வதன் மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெறுங்கள்.
23. கைதூக்கி விடுவதற்கு சுலபமானவராக இருப்பதன் மூலம் மற்றவர் உங்களை விரும்பும்படி செய்யுங்கள்.
24. நட்புறவுகளை உருவாக்க நீங்களாகவே முயற்சி செய்ய வேண்டும்.
25. உரைபாடலில் தாராள குணத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நண்பர்களை வென்றெடுக்க பழகுங்கள்.
அலைகள் பழமொழிகள்
தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கும்.. 04.03.2019