நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைமுறை விதிகள் அறிவிப்பு !! ஏப்ரல் 27ல் தேர்தல் !!
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருகின்ற, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைமுறை விதிகள், தலைமைத்தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு> நாடுவாரியான தேர்தல் ஆணையாளர்கள் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மூன்றாம் தவணைக் காலத்துக்கான தேர்தல் ஏப்ரல் 27ம் நாள், இடம்பெற இருக்கின்றது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பிலான ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் திரு. பொன் பாலராஜன் அவர்களினால் கனடாவில் நடாத்தப்பட்டிருந்தது.
1- வேட்புமனு சமர்ப்பித்தல் மார்ச் 10ந் திகதி முதல் மார்ச் 20ந் திகதி நள்ளிரவு வரை
2- வேட்புமனு மீளப் பெறுதல் மார்ச் 23ம் திகதி நள்ளிரவு வரை
3- வேட்பாளர் அறிவிப்பு மார்ச் 25ம் திகதி
4- தேர்தல் ஏப்ரல் 27ம் திகதி
தேர்தல் தொடர்பிலான நடைமுறைகள் மற்றும் இதர விடயங்களை தேர்தல் ஆணையத்தின் https://tgteelection.org/tamil/ இந்த இணையம் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுவாரியான தேர்தல் ஆணையாளர்களின் விபரங்கள்
டென்மார்க் – நோர்வே – சுவீடன் – பின்லாந்து
Mr S.K. kathir
Email. kathirkar@hotmail.com
Tel.no: 4591403739