ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (06) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோரிக்கை விடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.