தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படவே இருவரும் விவாகரத்து வாங்கி கொண்டனர். இதனையடுத்து சோனியா அகர்வாலும் நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது தடம், யார் உள்ளிட்ட படங்களின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் தனிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை தனிமை படத்தின் டீசர் வெளியாக உள்ளது.