நேற்று முன்தினம் உலக புத்தக நாள் இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் யாழ். பொது நூலக மேலாளரிடம் வைபவ ரீதியாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழில் பேருந்து தரிப்பிடத்தில் நின்ற மக்களுக்கு உலக புத்தக நாளை நினைவூட்டி நூறு பிரதிகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.
தன்னம்பிக்கையை வளர்க்கவும், வாசிப்புக் கலையை மேம்படுத்தவும், எடுக்கப்பட்ட இந்த பாரிய முயற்சிக்கு ரியூப் தமிழ் நிறுவனத்தின் தாயக உறவுகள் அரும்பணியாற்றி வருகிறார்கள்.
ஊர் ஊராக பாடசாலை பாடசாலையாக சென்று பணியாற்றி வருகிறார்கள். வீழ்ந்து போன அழிந்து போன வாசிப்புக்கலையையும், புத்தக வெளியீடுகளையும் புத்துயிர் பெறச் செய்ய இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் 10.000 புத்தகங்கள் இவ்வாறு வழங்கப்படுகின்றன, சித்திரை புத்தாண்டு வரை இந்தப்பணிகள் தொடரும்..
மே மாதம் இன்னொரு புத்தகம் வெளிவர இருக்கிறது.. அனைத்துமே தன்னம்பிக்கை நூல்களே வழங்கப்படுகின்றன.
நேற்று யாழ். நூல் நிலையம் சென்று பின் யாழ். பேருந்து நிலையம் சென்று புத்தகங்களை வழங்கி அவற்றை அழகாக காட்சிப்படுத்தியும் தந்துள்ளார்கள். கண்ணை கவரும் யாழின் அழகுடன் நூல் வழங்கலையும் பார்த்து மகிழுங்கள்.
உறவுகளே தாயகத்தில் வீழ்ந்து விட்ட அறிவுத்தேடலை மீட்டெடுக்க எம்மோடு நீங்களும் இணைந்தால் பணி இலகுவாகும் அல்லவா..
அலைகள் 09.03.2019 சனிக்கிழமை