டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி

டென்மார்க் தமிழ் ஆர்டிஸ்ற் அசோசியேசன் என்ற பெயர் கொண்ட தமிழ் கலைஞர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் திரையிசை பாடல்களுக்கான நடனப் போட்டி ஒன்றை நடத்த இருக்கிறது.

எதிர்வரும் யூன் மாதம் 09 ம் திகதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடத்த இருப்பதாக கலைஞர் சங்க நிர்வாகம் தெரிவிக்கிறது.

நேற்று கொல்ஸ்ரபோ நகரத்தில் உள்ள கலாச்சார இல்லத்தில் கலைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக சபையோர் முன் வைத்த பல்வேறு ஆலோசனைகளை சபை சீர்தூக்கியது.

அதில் நடனம், நாடகம், இசை என்ற மூன்று தலைப்புக்களில் முப்பெரு விழாக்களை இந்த ஆண்டு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஓரம்சமாக கோடை விடுமுறைக்கு முன்னதாக நடனப்போட்டி இடம் பெறப்போகிறது.

நடன ரசிகர்கள் அதுவும் திரையிசை நடன ரசிகர்களுக்கு அன்றைய நாள் ஒரு குதூகலமான திருநாளாக அமையும்.

திரையிசைப் பாடல்களுக்கான நடனத்தை அபாராமாக பழகியிருப்போருக்கு இது அரிய வாய்ப்பாக இருக்கிறது.

வாய்ப்பின்றி இருக்கும் சிறந்த கலைஞர்களை எல்லாம் வாய்ப்பளித்து மேடையேற்ற நமக்கான கலைகரளை மேம்படுத்தும் புதிய மேடை இதுவாகும்.

மேலும் பார்வையாளரும் சோர்வில்லாமல் பார்ப்பதற்கான முயற்சியாகவும் இது இருக்கிறது.

போட்டிக்கான விதி முறைகள் பரிசுகள் போன்ற விபரங்களை எதிர்பாருங்கள்.. இந்த நிகழ்ச்சி அடாது மழை பெய்தாலும் விடாது நடைபெறும்.

அலைகள் 11.03.2019 திங்கள்

Related posts