இலங்கையில் தற்போது 26 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், டொக்டர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆண்கள் கொண்டுள்ளதாகவும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியுள்ளார்.
எனவே, எதிர்வரும் வருடங்களில் இவ்வாறு புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இதற்கமைய புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.