நியூசிலாந்தைத் தொடர்ந்து கொலன்ட் நாட்டில் துப்பாக்கிப் பிரயோகம் மூன்று பேர் படுகொலை ஒன்பது பேர் படுகாயம்.
ரயில் வண்டி போல வீதியில் ஓடும் வாகனத்தில் நடந்துள்ளது தாக்குதல்..
கொலன்ட் நாட்டின் உற்றிக்ஜ் என்ற நகரில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் நடந்தது துப்பாக்கிப் பிரயோகம் என்று நகர மேயர் ஜன் வான் சனான் சற்று முன்னர் தெரிவித்தார்.
கொலைச்சந்தேக நபரை அல்லது நபர்களை தேடி போலீசார் வலை விரிப்பு..
எத்தனை பேர் என்பது தெரியவில்லை துருக்கி நாட்டை சேர்ந்த கொக்மான் ரென்னிஸ் என்ற 37 வயது சந்தேக நபரை தேடி போலீஸ் வலைவிரிப்பு..
கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை ஆனால் ஆனால் இரகசிய போலீசார் பயங்கரவாத தாக்குதல் என்பதை மறுக்கவில்லை.
இது குறித்து பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய கொலன்ட் நாட்டு பிரதமர் மாக்ரூற் கூறும்போது எமது நாட்டு ஜனநாயகம் கடும்போக்கு வாதத்தைவிட சிறந்தது என்று தெரிவித்தார்.
மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறி தேடுதல் நடக்கிறது. அதி நவீன கருவிகள் எல்லாம் வீதியில் இறக்கப்பட்டுள்ளன. மசூதிகள், பாடசாலைகள் யாவும் உடன் மூடப்பட்டன.
கொலன்ட் அதிபர் மார்க் ரூற்றிற்கு தனது அனுதாபங்களை டேனிஸ் ஸ்ரேற்மினிஸ்டர் லாஸ் லொக்க ராஸ்முசன் கூறினார்.
பயங்கரவாதமா இல்லையா என்பது முடிவாகவில்லை.. ஆனால் கடும்போக்குவாதம், மதவாதம், உளவியல் நோய் போன்ற காரணங்கள் இருக்கலாம் என்றார்.
நியூசிலாந்திற்கு பின் நடந்துள்ளது.. ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆபத்தான நிலை என்றும் தெரிவித்தார்.
தேடப்படும் துருக்கிய நபர் துருக்கியில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது..
தொடர்கிறது தேடல்.. இதுவரை யாரும் கைதாகவில்லை.
அலைகள் 18.03.2019