சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபடமுடியாத தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.