நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் பாதுகாப்பதற்குமான தனது கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் தனது இைறமையை பாதுகாக்கத் தொடர்ந்து செயற்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். இலங்கையில் அனைத்து தேவைகளினதும் அடிப்படையில் அமைந்த இது போன்ற சந்தர்ப்பங்களின் போது நாடுகள் எவ்வாறான நிலையில் இருந்தனவோ அவ்வாறான நாடுகளில் உள்ள நிபுணர்களின் கூட்டுறவுடன் தேசிய முறைமை ஊடாக அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பான நாட்டின் முன்னேற்றம் பற்றி ஐ. நா. மனித உரிமை பேரவை நிலைப்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார். மக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி தான் இப்போது ஜனாதிபதியும் அல்ல குறைந்தபட்சம் பிரதமருமல்ல என்பதை மறந்து விட்டார் போலும். ஆனால் நாட்டு மக்கள் அதை எளிதில் மறக்க மாட்டார்கள்.
அக்டோபர் 26ஆம் திகதி எமது பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்கு இட்டுச்சென்றவர்களின் முயற்சிகளை தொடர இடமளிக்கக் கூடாது. எமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்கம் விளைவிக்க இடமளிக்கக் கூடாது என்று கூறிய நிதி அமைச்சர் நல்லிணக்கத்துக்கான எமது பயணம் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.