01. போர்க்குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள இலங்கை அரசிடம் திராணியில்லை என்று சரவணபவன் எம்.பி முழங்கியுள்ளார்.
02. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம் பக்கச்சார்புடையது என்று கோத்தபாய ராஜபக்ஷ எரிந்து விழுந்தார்.
03. வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு மட்டுமே கொடுக்க முடியுமென அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா கூறியிருக்கிறார்.
04. கடந்த முப்பது வருடங்களாக நடந்த போரில் உண்டான வடுக்களுக்கு தமிழ் மக்களிடம் சிறீலங்கா பா.உ. தயாசிறி யாழில் வைத்து மன்னிப்பு கோரினார். ஆனால் ஆயுதம் எடுத்தால் அவர்களை அடக்க வேண்டியது அரசின் கடமை. சிங்களவர்களான ஜே.வி.பி காலத்திலும் அரசு இதைத்தான் செய்தது என்கிறார்.
05. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு இலங்கை மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமான முட்டாள்கள் அல்ல என்று பிரபல சிங்கள அரசியல் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேலி செய்துள்ளார்.
06. போர்க்குற்றங்களில் இருந்து இலங்கையை காப்பாற்றி பிணையெடுக்கும் வேலையையே தமிழர் கூட்டமைப்பு செய்துள்ளதாக அனந்தி சசிதரன் பகிரங்கமான குற்றம் சுமத்தினார்.
07. புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடி கண்டு பிடித்து தெற்கில் உள்ள பாதாள உலகக்குழுக்களுக்கு வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைதாகியுள்ளனர்.
இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் படி 90 தினங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படடுள்ளனர்.
08. புலம் பெயர் தமிழர் அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி வேண்டி கல்யாண மண்டபம் கட்டி வீண் செலவு செய்யாமல் அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் கேட்டுள்ளார். நோர்வே தமிழர் ஒருவரால் கிழக்கில் கட்டப்பட்ட வைத்தியசாலையை திறந்து வைக்கும்போது இவ்வாறு கூறினார்.
09. இனவாதத்தை பரப்பி மீண்டும் ஆட்சியில் ஏற ரணில் முயற்சிப்பதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
10. தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று ஜெனீவாவில் இமானுவல் அடிகளார் சூழுரை.
11. இது இவ்விதமிருக்க ஜெனீவா வந்த இலங்கை தமிழ் தலைவர்கள் சுவிஸ் தமிழர்களால் இம்முறை அடியோடு கைவிடப்பட்டதாக ஒரு கதை உலாப்போகிறது.
அலைகள் 24.03.2019