அன்புமணி, திருமாவளவன், எச்.ராஜா பெரும் கோடீஸ்வரர்கள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்களின் சொத்து விபரங்களை இங்கே பகிர்கிறோம்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் அசையும் சொத்தாக தம்மிடம் ரூ. 33,64,543 இருப்பதாகவும், தம் மனைவி செளமியாவிடம் 25.90 கிலோ வெள்ளி, 2.9 கிலோ தங்கம், 151.5 கேரட் வைரம் உட்பட ரூ 9,47,22,445 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்து தம்மிடம் ஏதுமில்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தமது மனைவியின் அசையா சொத்து மதிப்பு ரூ 23,37,57,019 என குறிப்பிட்டுள்ளார். தி நகரில் உள்ள வீடு தம் மனைவியின் பெயரில் உள்ளதாக கூறுகிறார்.

தனது பெயரில் எந்த கடனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, செளமியா பெயரில் 20,81,681 ரூபாய் வீட்டு கடன் உள்ளதாகவும், பிற கடன்கள் உட்பட மொத்தம் 7,26,81,681 ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அன்புமணி.

மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு தமது வேட்பு மனுவில் தம்மிடம் அசையும் சொத்தாக 31,09,818 ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், தம் மனைவி செளமியாவிடம் ரூ 43,242,948 மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அசையா சொத்தாக தம்மிடம் ஏதும் இல்லை என்றும், தம் மனைவியிடம் ரூ 26,21,93,500 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறி இருந்தார்.

திருமாவளவன்
திருமாவளவன் தம்மிடம் அசையும் சொத்தாக ரூ 58,71,292 மதிப்பிலான சொத்துகள் உள்ளதென்றும், அசையா சொத்தாக ரூ 25,77,800 மதிப்பிலான சொத்துகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருமானவரி நிலுவைகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கடன் பொறுப்புகளின் மொத்த மதிப்பு ரூ 3,94, 248 என கூறி உள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் தன் அசையும் சொத்து மதிப்பு 24,13,73,168 ரூபாய் என்றும், மனைவி ஸ்ரீநிதியின் சொத்து மதிப்பு ரூபாய் 9,37,99,140 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்தாக ரூபாய் 22,88,89,300 மதிப்புடைய சொத்துகள் உள்ளதென்றும், ஸ்ரீநிதியிடம் 22,96,67,413 மதிப்புடைய சொத்துகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ரூ. 8,97,44,503 கடன் உள்ளதென்றும், மனைவி ஸ்ரீநிதிக்கு 8,43,36,613 ரூபாய் கடன் உள்ளதென்றும் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்

எச்.ராஜா

எச். ராஜா தன் அசையும் சொத்தின் மதிப்பாக ரூ 50,97, 544 என்றும் தன் மனைவி லலிதாவின் சொத்து மதிப்பாக ரூ 19,12,417 என்றும், இந்து கூட்டு குடும்பத்தின் சொத்தாக ரூ 15,73,432 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு 77,90,000 ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருக்கிறது என்றும், தனது மனைவி பெயரில் 94,50,000 ரூபாய் மதிப்பிலான சொத்து இருக்கிறது என்றும், கூட்டு குடும்பத்திற்கு ரூ 4லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளதென தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெயரில் எந்த கடனும் இல்லை என்றும், தன் மனைவி பெயரில் வீட்டுக் கடன் ரூ 59,10,000 இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்,

Related posts