நோர்வேயில் சென்ற வாரம் இயந்திரம் பழுதடைந்து நின்று போன கப்பலின் இயந்திரம் எவ்வாறு பழுதடைந்தது…? இதற்கான அறிக்கை வந்துள்ளது.
துருக்கிக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை லிபியா நாட்டு கரையில் வைத்து 108 தஞ்சம் கோருவோர் கடத்தியபடியே கப்பலை இத்தாலிக்கு அருகில் உள்ள மேல்ரா நோக்கி கொண்டு வந்துள்ளனர். இப்போது கப்பலானது மேல்ரா தீவின் கரையில் நிற்கிறது. ஐந்து பேர் கைதாகியுள்ளனர், அந்த நாட்டு படையினர் கப்பலில் நிற்கிறார்கள்.
இதை தஞ்சம் கோரும் செயல் என்று கருத முடியாது ஒரு விமானத்தை கடத்தியது போன்ற செயல்.. இவர்கள் கடற் கொள்ளையர் என்ற குற்றச்சாட்டு பிறந்துள்ளது. இதனால் கப்பலில் இருக்கும் சிறு பிள்ளைகளும் கடற் கொள்ளையர் பட்டம் பெற்றுள்ளனர். இது குறித்த செய்தியை காணொளி வடிவில் கண்டு மகிழுங்கள்.
அலைகள் 29.03.2019